ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
இலங்கையில் 5G தொழில்நுட்பத்தை விரைவில் அறிமுகப்படுத்த தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தயாராகி வருகிறது.
இதற்கான சோதனை நடவடிக்கைகள் தற்போது வரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இயங்கும் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இந்த சோதனை நடவடிக்கைகளை நடத்தி வருவதாக ஆணையம் கூறுகிறது.
இலங்கையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் கொண்ட வீதி திட்டம் ஒன்றை தயாரிப்பதே இதன் நோக்கமாகும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் 5G தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி வைப்பதாக குறிப்பிட்டதற்கமைய இந்த நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.