9வது கஹட்டோவிட்ட ப்ரீமியர் லீக் (KPL) சுற்றுப் போட்டியில் Riverside Rangers அணி சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
இந்த சுற்றுப்போட்டிகள் கடந்த சனிக்கிழமை (01) கஹட்டோவிட்ட பொது மைதானத்தில் ஆரம்பமானது. 9 அணிகள் பங்குபற்றிய இப்போட்டிகளின் இறுதிப்போட்டி நேற்றைய தினம் (04) இடம்பெற்றது.
இறுதிப் போட்டிக்கு Riverside Rangers மற்றும் Attawala Alliance அணிகள் தெரிவாகியிருந்தன. முதலில் துடுப்பெடுத்தாடிய Attawala Alliance அணிகள் நிர்ணயிக்கப்பட்ட 7 ஓவர்களில் 93 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Riverside Rangers அணி ஒரு பந்து மீதமிருக்கையில் வெற்றியிலக்கை தாண்டியது.
இம்முறை வழமையை விட கிண்ணங்களின் எண்ணிக்கையை குறைத்து மீதமான நிதியை இரு சிறுநீரகங்களும் பழுதடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவி பாத்திமா முபஸ்ஸிராவுக்கு வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.