ஓய்வு பெற்று செல்லும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.இராஜதுரைக்கு கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் பாராட்டு நிகழ்வு இன்று (05) புதன்கிழமை.
கல்முனை பிரதேச செயலகத்தில் பிரதி திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றிய கே.இராஜதுரை அவர்கள் (2020.02.06)தனது 30 வருடகால அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்று செல்லுகின்றார்.
இன,மத பிரதேச வேறுபாடுகள் இன்றி கல்முனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய அவர் எல்லோருடனும் அன்பாகவும்,பண்பாகவும்,பாசாமகவும் பழகக்கூடிய உன்னதமானவர்.
கல்முனை பிரதேச செயலக திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்களினால் பிரதி திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றிய கே.இராஜதுரை அவர்களுக்கு பிரியாவிடை மற்றும் பாராட்டு வழங்கும் நிகழ்வு இன்று(05) சாய்ந்தமருது சீப் பிரிட்ஸ் ஹோட்டலில் மிக விமரிசையாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம்.எம்.நஸீர்,கணக்காளர் வை.ஹபிபுல்லா,நிர்வாக உத்தியோகத்தர் எம்.எ.எம்.எச் மனாஸ் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி எம்.நஜிம், நிர்வாக கிராம சேவை.உத்தியோகத்தர் யூ.எல் பதுருத்தீன்,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான், உத்தியோகத்தர் உதவியாளர் ஏ.சி.எம் பழீல்,நிதி உதவியாளர் எம்.ஐ.ஏ ரகுமான் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்(திட்டமிடல் பிரிவு) எம்.ஹசன் உட்பட திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.