தக்காளிப் பாவனையை
தற்காலிகமாக நிறுத்த வேண்டும்
கத்திரிக்காய் உண்பதற்கு
காத்திரிக்கணும் மலியும் வரை
போஞ்சி வாங்கியதால்
தேஞ்சி போச்சு பணப் பை
குறிஞ்சி இலை கூட
குறைஞ்ச விலையில் இல்லை
பயத்தங்கா விலை கேட்டு
பயந்தாங்க பல பேரு
வெண்டிக்கா கொஞ்ச மேனும்
வேண்டிக்க வசதி இல்லை
கோவா விற்பவன் மேல்
கோவமாய் வருகிறது
கரட்டை நிறுக்கிறார்கள்
கரட் தங்கம் நிறுப்பது போல்
லீக்ஸ் கூடிய காரணத்தை
விக்கி லீக்ஸும் அறியாது
பீன்ஸ் வாங்கப் போகிறவர்
பின் வாங்கிறார் விலை கண்டு
பீட் றூட் கணக்குப் பார்க்க
ஹார்ட் பீட் எகிறுது
கூட்டி விற்கும் கொச்சிக் காயால்
கொஞ்சம் மூளையும் உறைக்குது
மரக்கறி உண்ணல் என்பது
மறக்கும் கறி ஆகிடுச்சு
இருக்கிறத வெச்சுக்கிட்டு
எப்படியோ சமாளிக்கார்