எச்.எம்.எம்.பர்ஸான்-
ஓட்டமாவடியைச் சேர்ந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் மூத்த எழுத்தாளருமான எஸ்.எல்.எம். ஹனீபா அவர்களின் இலக்கியப் பயணம் தொடர்பிலான விஷேட சந்திப்பு ஒன்று எஸ்.எல்.எம். ஹனீபா அவர்களின் நாவலடி இல்லத்தில் நடைபெற்றது.
எழுத்தாளர் எஸ்.எல்.எம். ஹனீபா அவர்களின் இலக்கியப் பயணத்தை நூல் வடிவில் கொண்டுவரும் முன்னெடுப்புக்களை மக்கத்துச் சால்வை வாசகர் வட்டம் மேற்கொண்டு வருகிறது.
அதன் தொடரில் எழுத்தாளர் எஸ்.எல்.எம். ஹனீபாவை நேரில் சந்தித்து அவரின் இலக்கியம், அரசியல் தொடர்பிலான பல்வேறு தகவல்களை கேட்டறிந்து கொள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் எழுத்தாளருமான ஏ.எம். றியாஸ் (அம்ரிதா), நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் எழுத்தாளருமான சிராஜ் மசூர் மற்றும் எழுத்தாளர்கள், ஓவியர்கள், எனப்பலரும் கலந்து கொண்டனர்.