உற்றுப்பாருங்கள் தெரியும் ஆற்று மணல்களும் எழுதும் அழகிய கவிதைகள். மாணவர்களை ஊக்குவித்து திலகர் எம்பி உரை

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
யாவரும் செய்யும் சின்ன சின்ன சாதனைகளையும் மதித்து அவர்களுக்கு பாராட்டுதலைப் தெரிவித்து ஊக்குவிக்கும் போது அவர்கள் உற்சாக மேம்பாட்டுடன் தொடர்ந்து நற்பண்புகளையும் முன்னேற்றத்தையும் வெளிப்படுத்துவர். இதனையே "உற்றுப் பாருங்கள் தெரியும் ஆற்று மணல்களும் எழுதும் அழகிய கவிதைகள்" எனும் ஹைக்கு கவிதை நினைவுபடுத்துகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கவாதி முத்துக்கிருஷ்ணன் நினைவுப் பேரவையின் ஏற்பாட்டில் நோட்டன் பகுதி பாடசாலைகளில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான ஊக்கப்படுத்தல் நிகழ்ச்சி பாடசாலை அதிபர் திருமதி செல்வகுமார் தலைமையில் இடம்பெற்றது. பேரவையின் செயலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான மு. ராமச்சந்திரன் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்
திருமதி முத்துகிருஸ்ணன் பாார்வதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இவ்விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே திலகர் எம்பி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
"உற்றுப்பாருங்கள் தெரியும் ஆற்று மணல்களும் எழுதும் அழகிய கவிதைகள்" எனும் கவிதை வரிகள் எனக்கு மிகவும் பிடித்தது. அது எல்லோரிடத்திலும் இருக்கும் சின்ன, சின்ன திறமைகளைக் கூட அடையாளம் காண ஊக்குவிக்கின்றது. ஆசிரியர்களை அத்தகைய திறமைகளை மாணவர்களிடத்தில் அடையாளம் கண்டு ஊக்குவிக்கும்போது அவர்கள் மேலும் முன்னேற உந்தப்படுகிறார்கள். அந்த வகையிலேயே முத்துக்கிருஷ்ணன் நினைவுப் பேரவை இந்தப் பகுதியில் திறமையை வெளிப்படுத்திய இளம் மாணவர்களை இன்று ஊக்குவிக்கும் இந்த நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்துள்ளார்கள். அதனூடாக தொழிற்சங்கத்துறையில் பணியாற்றிய முத்துக்கிருஷ்ணன் அவர்களின் பணிகளும் இங்கு நினைவு கூரப்படுகிறது. அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த மாணவர்கள் ஊக்கப்படுத்திப்படுவதனால் அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களும் இன்று அங்கீகாரம்

பெறுகின்றனர். போற்றப்படுகின்றனர். பிள்ளைகள் பரிசுகளை வாங்கும்போது பெற்றோரும் ஊக்கம் பெறுகின்றனர். மகிழ்ச்சி அடைகின்றனர். இப்படி ஒவ்வொருவரிடத்திலும் ஊக்கம் ஏற்படும்போது சமூக மாற்றத்திற்கான கதவுகள் திறக்கப்படுகிறது. இத்தகைய நிகழ்ச்சிகளை நடாத்த முன்வந்த பாடசாலை அதிபர் உள்ளிட்ட பாடசாலை நிர்வாகத்தினரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களை ஊக்குவிக்கும் முகமாக எனது சேகரிப்பில் உள்ள நூல் பொதிகளை அன்பளிப்பாக கொண்டுவந்துள்ளேன் என ஒஸ்போன், சமர்ஹில் , டன்கெல்ட் ஆகிய பாடசாலைகளின் நூலகங்களுக்கு நூல்தொகுதிகளையும் வழங்கிவைத்தார்.

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட டங்கெல்ட்,சமர்ஹில்,கிளர்வட்டன்,நோட்டன் கணபதி,ஒஸ்போன் ஆகிய பாடசாலைகளை சேர்ந்த
நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டது. அதிகூடிய புள்ளி பெற்ற மாணவருக்கு டிக்கோயா ரோட்டரிக் கழகத்தின் சார்பில் "சிறுவர் கலைகளஞ்சியம்" பரிசாக வழங்கி வைக்கப்பட்டதுடன் பாடசாலை நூலகங்களுக்கு அவர்களும் நூல் பொதிகளை வழங்கி வைத்தனர்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -