கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ்நஸீர் அஹமட்
இலங்கையின் சுதந்திரத்திற்காகப் பங்களிப்புச் செய்த சிறுபான்மை சமூகங்களின் உரிமையை மதித்து அவர்களுக்கு சம உரிமைகளை வழங்குவதன் மூலமாக பெரும்பான்மைச் சமூகத்தோடு கைகோர்த்து வாழும் நிலையை உருவாக்கும் தேசத்தை கட்டியெழுப்பும் முயற்சியை அரசியல் தலைவர்கள் மீண்டும் தொடங்க வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ்நஸீர் அஹமட் தெரிவித்தார்.
72ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓட்டமாவடி முச்சக்கர வண்டி சாரதிகள் கூட்டுறவுச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவி த்தார்.
வாழைச்சேனை பதில் நீதிவானும் சட்டத்தரணியுமான ஹபீப் றிபான், ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர்கள், வாழைச்சேனை காகித தொழிற்சாலையின் தவிசாளர் முச்சக்கரவண்டிச் சங்கத்தினர், உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்து கொண்ட நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் தெரிவித்ததாவது:-
'இலங்கையர்கள் என்ற பெருமையோடு இன,மத பேதமின்றி நாட்டின் அபிவிருத்திக் காக நாம் அனைவரும் கைகோர்ப்பது கட்டாய கடமையாகும்.அதன் பிரதிபலிப்பாக எதிர்கால சமுதாயத்துக்கு இனவாத மதவாத பிரிவினைகளை விதைக்காமல் இலங் கையர் என்ற உணர்வூட்டி வளர்ப்பது பெற்றோர்கள்,ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் போன்றவர்களின் கடமையாக உள்ளது.
கடந்த 30 ஆண்டு காலமாக எமது நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரண மாக உயிர்ச் சேதங்கள், பொருளாதார இழப்புக்கள் போன்றவைகளை அனுபவித்து நாட்டின் அனைத்து மக்களும் அடக்கு முறைக்குள் வாழ்ந்து வந்தோம். தொடர்ச்சி யான யுத்தம் எனும் பேரழிவிலிருந்து எமது நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பா ற்றிய பெருமை தற்போதைய ஜனாதிபதியையும் பிரதமரையுமே சாரும்.
1948ஆம் ஆண்டு கிடைத்த சுதந்திரக் காற்றை அதன் பிற்பாடு நாட்டில் முளை யெடுத்த இனவாதமும், யுத்தமும், தற்போதைய மதவாதமுமே சீரழித்து விட்டன. தொடர்ந்தும் நாம் சுவாசிக்கும் இந்த சுதந்திரக்காற்று தொடர்ந்து வீசுவதற்கு இனவாதம் மதவாதம் களைந்து நாம் ஒற்றுமையோடு பயணிக்க வேண்டும்' என்றார்.