உலகம் பூராகவும் 11 கோடி ரெட்மி நோட் சீரீஸ் ஸ்மார்ட்போன்களை விற்ற சியோமி நிறுவனம்.




ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

சியோமி நிறுவனம் இதுவரை உலகம் பூராகவும் 11 கோடி ரெட்மி நோட் சீரீஸ் ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளது.

சியோமியின் ரெட்மி நோட் சீரிஸ் 2014ம் ஆண்டு முதல் சந்தையில் வாடிக்கையாளர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறைந்த விலையில் சிறந்த சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போனாக இருப்பதே இதற்கு காரணம். முதல் ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் முதல் சமீபத்திய வெளியாகிய ரெட்மி நோட் 9-சீரிஸ் வரை சியோமி என்பது உலகம் முழுவதும் ஒரு பிரபலமான நாமமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், ரெட்மி பிராண்டை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்ததில் இருந்து 2019ம் ஆண்டின் 4ம் காலாண்டு வரை உலகளவில் 11 கோடி ரெட்மி நோட் சீரீஸ் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. இதனை சியோமி நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. அண்மையில் ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஆகிய 2 மொடல்களை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்தது.

WOW! Over 110,000,000+ Redmi Notes have been sold worldwide!
Let Mi know if you are part of the Redmi Note family too!️ #NoMiWithoutYou #TheLegendContinues pic.twitter.com/p2qMFM45Pe
— Xiaomi (@Xiaomi) March 13, 2020
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -