அம்பாறை மாவட்டத்தில் அரசியலுக்கு வரவிருக்கும் பிரதமரின் 2வது புதல்வர்.




ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் 2வது புதல்வரான கடற்படை லெப்டினட் கமொண்டர் யோஷித்த ராஜபக்ச அரசியலில் ஈடுபட தீர்மானித்துள்ளதுடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் போட்டியிடவுள்ளதாக பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமது உரிமையை கிழக்கு மாகாணத்தில் உறுதிப்படுத்துவதற்காக ராஜபக்ச குடும்பத்தினர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
யோஷித்த ராஜபக்சவின் மனைவி நிதீஷா, மீடியா பெக்டரி என்ற விளம்பர விநியோக நிறுவனத்தின் மீடியா செடுலிங் நிறுவனத்தை கொள்வனவு செய்திருந்தார். அரசியல் பிரசார நடவடிக்கைகளை முகாமைத்துவம் செய்யவே இந்த நிறுவனம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் CSN தொலைக்காட்சி சேவையை நடத்துவதற்கான நிதியை எவ்வாறு பெற்றார் , பொதுச் சொத்துக்களை தவறான வழியில் பயன்படுத்தினார் போன்ற குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு யோஷித்த ராஜபக்ச 42 நாட்கள் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தார்.
ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச நாமல் ராஜபக்ச, நிருபமா ராஜபக்ச, ஸசீந்திர ராஜபக்ச ஆகியோர் ஏற்கனவே அரசியலில் இருந்து வருகின்றனர். யோஷித்த ராஜபக்சவின் வருகையுடன் அரசியலில் ஈடுபட்டுள்ள ராஜபக்ச குடும்பத்தினரின் எண்ணிக்கை 8 ஆக அதிகரிக்கும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -