உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் அதை தடுப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் பல்வேறு தனியார் நிறுவனங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதிகளை அளித்து வருகின்றன. அந்த வகையில் பேஸ்புக் நிறுவனம் கொரோனா தடுப்பிற்காக $20 Million ( சுமார் 365 கோடி ரூபா ) நிதியளித்துள்ளது.
இந்த அறிவிப்பை பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டார் அதில் கொரோனாவைத் தடுப்பதற்காக உலக சுகாதார அமைப்பிற்கு ( World Health Organization’s ) $10 Millionயையும் , CDC Foundation எனும் தொண்டு நிறுவனத்திற்கு $10 Million என மொத்தமாக $20 Million நன்கொடை வழங்கும் என அந்த அறிவிப்பில் கூறியிருந்தார்.
ஏற்கனவே மைக்ரோசொப்ட் மற்றும் அமேசன் நிறுவனங்கள் கொரோனாவின் பாதிப்பை தடுக்க நிதி வழங்கியுள்ளது.