சமகால கொரோனா நெருக்கடியினால் மிகவும் பாதிக்கப்பட்ட நெடுங்கேணி மக்களுக்கு கடல்கடந்த அசிஸ்ற் ஆர்ஆர் அமைப்பு உலருணவு உதவியை 2000 அன்றாடங்காய்ச்சி குடும்பங்களுக்கு வழங்கிவைத்துள்ளது.
அசிஸ்ற் ஆர்ஆர் அமைப்பின் சர்வதேச தலைவர் கலாநிதி வேலாயுதம் சர்வேஸ்வரன் அந்நிவாரணப்பொதியை நேரடியாகவே வழங்கிவைத்தார். ஊரடங்குவேளையில் இவ்வுதவியை நெடுங்கேணி பிரதேச செயலாளர் எஸ்.பிரதாபன்
முன்னிலையில் அவரது தெரிவுப்பட்டியலினடிப்படையில் இவை வழங்கப்பட்டன.
தினக்கூலியை நம்பி ஜீவனோபாயத்தை நடாத்தும் குடும்பங்களே இப்பட்டியலில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
ஒவ்வொன்றும் 1000ருபா பெறுமதியான நிவாரணப்பொதியை அசிஸ்ற் ஆர்ஆர் அமையம் முதலில் 500குடும்பங்களுக்கு வழங்கிவைக்க தொடர்ந்து ஜஎம்எச்ஓ மற்றும்
அன்பாலயம் அமைப்பு போன்றன மீதி 1500 குடும்பங்களுக்கும் இப்பொதிகளை வழங்கிவைத்தது.