உலகையே அச்சுருத்திவரும் கொரோனா வைரஸ் தற்போது இலங்கைக்குள்ளும் பரவி இருப்பது நாம் அறிந்ததே, அதேநேரத்தில் அரசாங்கம் நாடுமுழுவதும் பாடசாலைகளை மூடுவதற்காக எடுத்துள்ள தீர்மானம் இந்நோய் பரவக்கூடிய,பரவியிருக்கக்கூடிய வீரியத்தினையும் ஆபத்தினையும் நம்மக்கு எச்சரிக்கின்றது. இந்த நேரத்தில் மக்கள் அச்சப்படாமல் இந்நோயிலிருந்து எமது மக்களை பாதுகாப்பதற்கான வழிவகைகள் என்ன என்பதனை அறிந்து நடைமுறைக்கு கொண்டுவருதல் அவசியமானதாகும் .
அக்கரைப்பற்று ஜும்மா பெரியபள்ளிவாசல் தலைவர் SM சபீஸ்
நாம் என்றோ ஒருநாள் மரணித்தே தீருவோம் அதனால் கொரனாவை நினைத்து தினம் தினம் எமது மக்களையும் நமது குழந்தைகளையும் அச்சப்படுத்தி அவர்களை நோயுற்றவர்களாக மாற்றுவதை விட கொரோனா நோயினை எதிர்த்து நம்மில் தொற்றவிடாமல் தடுப்பதற்குரிய வழிவகைகளை நாம் எமது மக்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று இச்சந்தற்பத்திலே கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் இறைவனின் இச்சோதனையை பொருந்திக்கொண்டு அவனுக்கு அஞ்சி அனைத்துமக்களையும் பாதுகாக்க அதிகம் அதிகம் பிரார்த்திக்குமாறும் ,அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் வேண்டிக்கொண்டுள்ளார்