கொரோனா வைரஸ், பொருட்களின் மேற்பரப்பில் ஒருநாள் அல்லது அதற்கு மேற்பட்டும் வாழக்கூடியது என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா பெரும்பாலும், காற்றில் பயணிக்கும் நீர்த்துளிகள் வாயிலாகவே பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு பொருட்களின் மேற்பரப்பில் பரவி படிந்துவிடும் கொரோனா வைரஸின் வாழ்நாளானது, வெப்பநிலை, ஈரப்பதம், பொருளின் தன்மை போன்றவற்றின் அடிப்படையில் வேறுபடும் என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
சராசரியாக 20 °C வெப்பநிலையில் கொரானா வைரஸ் இரும்பு பொருட்களின் மேற்பரப்பில் 2 நாட்களும், மரம் மற்றும் கண்ணாடியின் மேற்பரப்பில் 4 நாட்களும், உலோகம், செரமிக், பிளாஸ்டிக் போன்ற பொருட்களின் மீது 5 நாட்கள் வரையிலும் வாழ கூடியது என ரேச்சல் கிரேஹம் எனும் ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.