எப்.முபாரக்-
இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா அபாயத்திற்கு எமது நாடும் உட்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பூரணமாக சைவ மக்களையும் ஆலயங்களையும் கோருகின்றோம் என நல்லை, தென்கயிலை, கீரிமலை ஆதீன குருமுதல்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆலய திருவிழாக்களை இயன்றளவு எளிமையாக மக்கள் நெரிசல் இல்லாமல் நிகழ்த்த முயலுங்கள். விசேட நிகழ்வுகளை தவிருங்கள். அன்னதானம் வழங்கும் நிகழ்வுகளை தவிர்த்து கொள்ளுங்கள்.
இரு வாரங்களுக்குள் வெளிநாடுகளிலிருந்து வந்தோர் ஆலயங்களிற்கு செல்வதை முற்றாக தவிர்த்து கொள்ளுங்கள்.எனவும் பொது மக்களை கேட்டுள்ளனர்.
இந்த கொடிய நோயிலிருந்து உலக மக்களை காப்பாற்ற இறைவனை மனமுருகி பிரார்த்திப்போம் எனவும் ஆதினங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.