கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வேப்பையடி ஆரம்ப வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி வழங்கி வைக்கப்பட்டதனை தொடர்ந்து வியாழக்கிழமை(12)பிற்பகல் வேப்பையடி வைத்தியசாலை வைத்தியர் சித்தி ஜாயிஷா அனீஸ் தலைமையில் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
திட்டமிடல் பொறுப்பு வைத்தியர் வைத்தியர் மாகிர் ,உயிரியல் வைத்திய பொறியியலாளர் ரவிச்சந்திரன் ஆலய தலைவர்கள் , சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்கத்தினர் , பொதுமக்கள் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் , ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.