ஏ.எச்.எம்.பூமுதீன்-
துபாயிலிருந்து வருகை தந்த அட்டுளுகமை நபர் ஒருவருக்கு கொரோனா தொற்றியிருப்பது தெரிய வரவே அவரை, 14 நாட்கள் சுய தனிமைப் படுத்தலில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், அதனை அசட்டை செய்த அந்நபர் − அட்டுளுகமையில் பல இடங்களுக்குச் சென்று வந்துள்ளார். சிங்கள இணையத்தளம் ஒன்றின் செய்திப்படி , குறித்த நபர் 26 வீடுகளுக்கு சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் 40 வீடுகளுக்குச் சென்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்தே முழு அட்டுளுகமைக்கும் இன்று பொலிஸார் " சீல் " வைத்து இழுத்து மூடியுள்ளனர்.
தற்போது அங்கு பதற்றமான"சூழ்நிலை காணப்படுவதாக கூறப்படுகின்றது.
அட்டுளுகமைக்குள் எவரும் உள் நுழைய முடியாது மட்டுமன்றி , எவரும் வெளியேறவும் முடியாது.
தொற்றினால் பாதிக்கப்பட்ட இளைஞன் நேற்று இரவு IDH வைத்தியசாலையில் அநுமதிக்கப்பட்டுள்ளார். இவருடன் நெருங்கிப் பழகிய பலர் தற்பபோது தலைமறைவாகியுள்ளனர்..
இதேவேளை , அட்டுளுகமைக்கு அருகிலுள்ள பேருவளையில் இன்று இடம்பெற்ற ஊர்வலம் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது மட்டுமன்றி மக்களின் பலத்த கண்டணத்தையும் எதிர் நோக்கியுள்ளது.