கண்டியில் பிரபல தொழிலதிபர் பாரிஸ் ஹாஜி களமிறங்குவது ரவூப் ஹக்கீமின் வெற்றியை கேள்விக்குறியாக்கும்..!

அபு மபாஸ்-
திர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி இடம்பெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களிலும் ஒவ்வொரு கட்சிகளும் பலமான வேட்பாளர்களை நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் கண்டி மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஆளும் அரச தரப்பு சார்பாக

கண்டியில் பிரபல தொழிலதிபர் பாரிஸ் ஹாஜி என்பவரை களமிறக்கியுள்ளமை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் வெற்றியை கேள்விக்குறியாக்கும் என்று அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் கண்டி மாவட்டத்தில் பல வருடங்களாக தனது சொந்த பணத்தில் வறிய மக்களுக்கு பாரிய சேவைகளை செய்துவரும் ஒருவரையே பொதுபெரமுன கட்சி இனம் கண்டு களமிறக்கி இருப்பது சந்தேகத்தை உண்டு பண்ணுவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்று ஒரு குழுவாக போட்டியிடும் சஜீத் பிரமதாசவின் கட்சியிலேயே ரவூப் ஹக்கீம் கண்டியில் களமிறங்க உள்ளதால் அங்கு சஜீத் சார்பான கட்சி படுதோல்வி அடையும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -