கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவின் கீழ் இயங்கிவரும் ஓட்டமாவடி சிகரம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் இவ்வாண்டிற்கான புதிய நிர்வாகத் தெரிவு வியாழக்கிழமை (12) ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் எஸ்.ஐ.தெளபீக் தலைமையில், பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஜெயசேகர் முன்நிலையில் நடைபெற்ற நிர்வாகத் தெரிவில் தலைவராக எஸ்.ஐ.தெளபீக், உப தலைவராக எம்.ஏ.அப்துல் ஹமீட், செயலாளராக எஸ்.எல்.ஐனுல் ஆரிபா, பொருளாளராக ஐ.ரீ.பதுர்தீன் ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
இவர்களோடு நிர்வாக உறுப்பினர்களாக எம்.சாதிக்கின், யூ.நளீபா, எம்.சாபி, கே.எல்.இஜாஸ், ஏ.எல்.எம்.பானு, எஸ்.எம்.பீர் முகம்மட், எச்.எம்.ஆதம் பாவா, எம்.ஜெலீலா ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்தோடு சங்கத்தின் கணக்குப் பரிசோதகர்களாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.டபள்யூ.எம். நுஸ்கா, ஆர். யாழினி ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.