மலையகத்தில் பெருந்தோட்டப்பகுதிகளில் 'கொரோனா' வைரஸ் தடுக்க நடவடிக்கை..

க.கிஷாந்தன்-

லையகத்தில் பெருந்தோட்டப்பகுதிகளில் 'கொரோனா' வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

"கொரோனா" வைரஸ் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று (21.03.2020) அன்று அட்டனிலுள்ள பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அலுவலகத்தில் அமைச்சர் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளின் தலைவர்கள், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள், பொலிஸார் என உயர்மட்ட அதிகாரிகள் பலரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

"கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எனது அமைச்சின் ஊடாக முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும். அத்திட்டத்தை எவ்வாறு முன்னெடுக்கலாம் என்பது பற்றி கலந்துரையாடப்பட்டது.

நாளையும் (22) கூட்டமொன்று நடைபெறவுள்ளது. இராணுவத்தினர், பொலிஸார், பிரதேச சபை தலைவர்கள் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர். பெருந்தோட்டப்பகுதிகளில் இந்நோய் பரவாமல் இருப்பதற்கு என்னென்ன உதவிகள் தேவையோ அவை அனைத்தும் எனது அமைச்சின் ஊடாக வழங்கப்படும்.

அதேவேளை, தை பிறந்தால் வழி பிறக்கும் என நான் கூறியிருந்தேன். இதன்படி ஏப்ரல் 10 ஆம் திகதி சம்பளத்துடன் ஆயிரம் ரூபா நிச்சயம் கிடைக்கும்.

நாட்டில் தற்போது வறட்சியான காலநிலை நிலவுகின்றது. பொலிஸ் ஊரடங்குச்சட்டமும் அமுலில் உள்ளது. அதற்கான நிவாரணமும் எமது மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும்." - என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -