ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதியின் முள்ளிப்பொத்தானையில் இயங்கி வந்த சதொச விற்பனை நிலையம் அண்மையில் மூடப்பட்டுள்ளது. தற்போதைய அசாதாரண நிலை காரணமாக மக்கள் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இயலாமையாக உள்ளது பெரும் கஷ்டத்தை எதிர்நோக்குவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த சதொச கிளையின் விற்பனை நிலையம் அண்மையிலேயே மூடப்பட்டதாகவும் தெரியவருகிறது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதார நிலை கொரோனா நோய் தாக்கம் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது இதனால் அத்தியவசிய பொருட்களை பெருவதில் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
குறித்த சதொச விற்பனை நிலையத்தை திறந்து மக்களின் பொருட் கொள்வனவிற்கும் இலகுபடுத்தக் கூடிய வழி வகைகளை செய்து தருமாறும் உரிய அதிகாரிகளிடத்தில் கோரிக்கை விடுக்கின்றனர்.
குறித்த சதொச விற்பனை நிலையத்தை திறந்து மக்களின் பொருட் கொள்வனவிற்கும் இலகுபடுத்தக் கூடிய வழி வகைகளை செய்து தருமாறும் உரிய அதிகாரிகளிடத்தில் கோரிக்கை விடுக்கின்றனர்.