கொழும்பு பிரதேசத்தில் உள்ள வறிய குடும்பங்களுக்கு களத்தில் நின்று உதவினார் ஜனகன்...!


றிஸ்கான் முகம்மட்-

கொரோனா (Covid - 19) காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை கருத்திற் கொண்டு நாட்கூலி தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உணவுத் தேவையை பூர்த்திசெய்யும் பொருட்டு ஜனனம் Foundation மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. கொழும்பு பிரதேசங்களில் (தெஹிவளை, வெள்ளவத்தை, மட்டக்குளிய) வாழும் சுமார் 600 குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கியது.

அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் திரு.ஜனகன் விநாயகமூர்த்தி அவர்களின் முன்னெடுப்பில் முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினர் குருசுவாமி தலைமையில், தற்போதைய கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் திரு பால சுரேஷ், திருமதி மஞ்சுளா, திரு விஷ்ணுகாந்த் மற்றும் ஜனனம் Foundationஇன் அலுவலக உறுப்பினர்களின் உதவியுடன் வெற்றிகரமாக உலர் உணவுப் பொதிகள் 600 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நடவடிக்கையை அடுத்து வரும் தினங்களிலிலும் தொடரும்படி தலைவர் மனோ கணேசன் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -