அவசர உதவி கோருவோருக்கு உதவத்ததயார்.


கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தின் காரணமாக அன்றாட உழைப்பின் மூலம் வாழும் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள். அவர்கள் அவர்களுடைய கஷ்டங்களை சொல்லி உதவிகேட்பதற்கும் வெட்கப்படும் நிலைமையும் தோன்றியுள்ளதையும் அவதானிக்க கூடியதாகவுள்ளது. குறிப்பாக வீட்டிலே பால் குடிக்கும் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் இன்னும் கஷ்டப்படுகின்றார்கள்.

இந்த நிலையில் அவர்களுக்கு நாம் ரகசியமான முறையில் உதவிகள் செய்துகொண்டுதான் வருகின்றோம். இருந்தாலும் அவர்களுக்கு பொருள் உதவியைவிட கைச்செலவுக்காண பணமே அவசரமாக அவர்களுக்கு தேவைப்படுவதாக கூறுகின்றார்கள். இந்த நிலையை கருத்தில் கொண்டு வீடுகளிலே கைக்குழந்தைகளை வைத்துக் கொண்டிருக்கும் ஏழைத் தாய்மார்கள் நூறுபேருக்கு 1000/=ரூபாய் வீதம் கொடுப்பதற்காக ஏற்பாடுகள் செய்துள்ளோம்.

ஆகவே.. எமது பகுதியை அண்டிய பணத்தேவையுடைய கைக்குழந்தைகளை வைத்துள்ள ஏழைத் தாய்மார்கள் யாராவது இருந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்வு கொண்டு உங்களது பெயர்களையும் விலாசத்தையும் தாருங்கள். நீங்கள் வசிக்கும் இடத்திற்கே அந்த பணத்தை கொண்டுவந்து ஒப்படைப்போம். நீங்கள் எங்களைத்தேடி வரவேண்டிய அவசியம் கிடையாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்...!

0772355366...0672222789

நல்லுள்ளம் கொண்டவர்கள் தயவு செய்து இதனை செயார் செய்து உதவுங்கள்...!

எம்எச்எம்.இப்றாஹிம்
கல்முனை.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -