ஐக்கிய மக்கள் சக்தி முக்கியஸ்தர் கயான்
சஜித் பிரேமதாஸ தலைமையிலான கூட்டணியை ஆதரிக்கிற தீர்மானத்திலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர் கயான் தர்ஷன தெரிவித்தார்.
இறக்காமத்தில் ஊடகவியலாளர்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேசிய இவர் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் சொல்லியபோது இது தொடர்பாக மேலும் தெரிவித்தவை வருமாறு
நீங்கள் சொல்வது போல ஐக்கிய தேசிய கட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரித்து வந்திருப்பது உண்மைதான். ஆனால் தற்போதைய நிலை வேறு.
ஐக்கிய மக்கள் சக்திக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் பேச்சுவார்த்தை இடம்பெற்று உள்ளது என்று அறிகின்றேன். அப்பேச்சுவார்த்தைகளின்போது ஐக்கிய மக்கள் சக்தியையே ஆதரிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தெரியப்படுத்தினர் என்றும் அறிகின்றேன். தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரம் அன்றி தமிழ் மக்களும் ஐக்கிய மக்கள் சக்தியுடனேதான் உள்ளனர்.