காமிஸ் கலீஸ்-
கொரோனா (கோவிட்-19) வைரஸ் தாக்கமானது சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள பதிப்புக்கள் தொடர்பாகவும் அப் பாதிப்புகளில் இருந்து மீளெழுவதற்கான மருத்துவம், ஜீவனோபாயம் மற்றும் சமூகம் சார்ந்த முயற்சிகள் தொடர்பாகவும் எதிர்காலங்களில் இவ்வாறான அசாதாரண நிலைமைகளின் போது கடைப்பிடிக்கப்படவேண்டிய முறைமைகள் தொடர்பாகவும் பிரதேச வாரியான அத்தியாவசிய தீர்மானகளினை மேற்கொள்வதற்காக மருதமுனை அகாஸ் அமைப்பினரின் முயற்சியில் கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று (26/03/2029) காலை 11 மணிக்கு மருதமுனை பொதுநூலக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கலந்துரையாடல் நிகழ்வில் மார்க்க அறிஞர்கள், பள்ளிவாசல் நிருவாகத்தினர், வைத்திய ஆலோசகர்கள், பல்துறைசார் புத்திஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
பொதுவான தலைமைத்துவம், அதன் கீழ் நிர்ணயிக்கப்படவுள்ள பணிகளை நிறைவேற்ற அமைப்பு ரீதியான பங்காளர்களின் தெரிவு, முன்னெடுக்கப்படவுள்ள காப்பு மற்றும் முற்காப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இங்கு விரிவாக ஆராயப்பட்டிருந்தன.
இம் முன்னெடுப்பின் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக ஊரடங்கு நடவடிக்கைகள் காரணமாக சமூகத்தில் எழுந்திருக்கும் ஜீவனோபாய சவால்களை ஈடு செய்யும் சமூக உதவிகளை வழங்கும் செயற்பாடுகளை நிறைவேற்றவும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -