அருணலு மக்கள் முன்னணியின் தலைவர் டொக்கடர் கே.ஆர் கிசான் தெரிவிப்பு.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-ஐக்கிய தேசிய கட்சியில் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இம்முறை பொதுத்தேர்தலில் தனித்து நின்று போட்டியிடுவதாக தெரிய வந்துள்ளது.இவருடன் இருப்பவர்களை எடுத்து கொண்டால் ஐந்து அல்லது ஆறு பேர் இருப்பார்கள் அதில் அக்கில உட்பட இன்னும் ஒரு சிலரே நுவரெலியா மாவட்டத்தில் கூட நவீன் திசாநாயக்க மாத்திரம் தான் இவருடன் இருக்கின்றார் ஏற்கனவே மத்திய வங்கி கொள்ளையில் முழுமையாக முன்னின்று செயப்படடவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள். ஆகவே இவர்கள் தனித்து போட்டியிட்டாலும் இவர்களுக்கு மக்கள் வாக்களிப்பதனை தவிர்த்து கொள்ள வேண்டும். ஏனென்றால் மலையக மக்களின் ஈ.பி.எப்,ஈ.ரி.எப்,தொழிலாளர் சேம லாப நிதியம் ஓய்வூதிய நிதியம் ஆகியவற்றை மத்திய வங்க்pயிலிருந்து கிட்ட தட்ட ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சூறையாடப்பட்டுள்ளது.3000 கோடீ ரூபாய் இல் அர்ஜூன மகேந்திரன்,ரவி கருணாயக்க உட்பட அனைவரும் இதற்கு சம்பந்த பட்டுள்ளார்கள்.இது நீதி மன்றங்களில் கூட முறைபாடுகள் சுமத்தப்பட்டுள்ளன இந்நிலையில் இவர்கள் பிரிந்து சென்று வாக்கு கேட்கிறார்கள். அவர்களை மக்கள் இனங்கண்டு மக்கள் திருடர்களையும்,கொள்ளையர்களையும்,போதை கடத்தலில் ஈடுபடுபவர்களை பாராளுமனற்த்திற்கு அனுப்ப கூடாது மாறாக மக்கள் மக்களுக்கு சேவையாற்றக்கூடிய நேர்மையானவர்களையே தெரிவு செய்ய வேண்டும். என அருணலு மக்கள் முன்னணியின் தலைவரும் டாக்டருமான கே.ஆர் கிசான் தெரிவித்தார்.
இன்று (15) டிக்கோயா அருணலு மக்கள் முன்னணயின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்..
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ..இன்று மக்கள் உயிர்வாழக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது பொருளாதாரம் படு பாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.. இதற்கு காரணம் மத்திய வங்கியின் கொள்ளை.தோழிலாளர்களின் சேமலாப நிதியம் ஓய்வூதிய நிதியிலிருந்து கூட 1000 கோடி ரூபா காசு களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனால் இன்று தங்களது இறுதி காலத்தில் ஓய்வூதியம் பெறுவதற்காக தொழிலாளர்கள் சென்றால் தோட்ட நிர்வாகம் இன்னும் ஓரிரு ஆண்டுகள் வேலை செய்யுஙகள.; என்று கேட்டு கொள்கின்றனர.இதற்;கு காரணம் மத்திய வங்கியில் பணம் இல்லை. ஆகவே மத்திய வங்கியின் பணத்தினை கொள்ளையிட்டவர்கள் மீண்டும்; இந்த நாட்டில் ஆட்சியினை பெற்றுக்கொண்டால் இந்த நாட்டிக்கு என்ன நடக்கும். என்று சிந்திக்க வேண்டும்.ஆகையால் நாங்கள் இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் கட்சியில் அருணலு மக்கள் முன்னணியிணைந்து போட்டியிட உள்ளது.நாங்கள் இம் முறை பொதுத்தேர்தலில் இரண்டு ஆசனங்களை கைபற்றுவோம்.நீங்கள் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வருபவர்களுக்கு ஒரு போதும் வாக்களிக்க கூடாது ஏனென்றால் இன்று அவர்கள் எதிர்கட்சிக்கு வந்தாலும் கூட அவர்கள் மக்களின் பக்கம் நிற்காது மக்களுக்கு எதிராக கொண்டு வருகின்ற பிரேரணைகளுக்கு ஆதரவாகவே இருப்பார்கள்.கடந்த காலங்களிலும் அவர்கள் அவ்வாறு தான் இருந்துள்ளார்கள். அதனூடாகத்தன் அவர்கள் அவர்களை காப்பற்றிக்கொள்ள முடியும்.ஆகவே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டு;ம். அதே போல் இன்று கடும் வறட்சி காரணமாக தோட்டத்தொழிலாளர்களுக்கு இரண்டு நாட்கள் தான் வேலை வழங்கப்படுகின்றன.தேயிலை மலைகள் காய்ந்து போய் உள்ளன. இந்நிலையில் அரசாஙகம் ஏனைய மக்களுக்கு மானியம் வழங்குவதனைப் போல் தொழிலாளர்களுக்கு மானியம் வழங்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.