கொரோனா என்றால்?
உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் மிகச்சிறிய பருமன் கொண்ட மிகப்பெரிய சக்தியாக இன்று எல்லோரின் முனுமுனுப்பிலும் உச்சரிக்கப்டுகின்ற பெயர், மகா யூத்தங்களைக் கண்டும் அச்சம் கொள்ளா வளர்ந்த நாடுகள் முதல் வளர்ந்து வருகின்ற நாடுகள் வரை அனைத்து தரப்பினரையூம் அஞ்சவூம், சிந்திக்கவூம் வைத்துள்ளது இந்த கண்ணுக்குப் புலப்படாத உயிரினம். இடத்திற்கேட்ப உயிர் வாழும் காலம் குறைவூதான் ஆனால் அக்காலத்தில் மிகப்பாரிய அழிவை விதைக்கின்றது. இதற்கு சர்வதேசம் இன்று கொரோனா கொவிட்-19 என்று பெயர் வைத்துள்ளது.
பரிவட்ட நச்சுயிரி அல்லது கொரோனா தீநுண்மி அல்லது கொரோனாவைரசு(Corona viruses) பாலூட்டிகளிலும் பறவைகளிலும் நோய்களை ஏற்படுத்தும் ஒரு தீநுண்மி ஆகும். இவை பசுக்கள், பன்றிகளில் வயிற்றுப்போக்கையூம், கோழிகளில் மேல் சுவாச நோயையும் உண்டாக்கும். இத்தீநுண்மிகள் மனிதர்களுக்கு சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. இத்தொற்றுகள் பெரும்பாலும் மிதமானவையாக இருந்தாலும் அரிதான சந்தர்ப்பங்களில் ஆபத்தானவையாக உள்ளன. இந்நோய்க்கான தடுப்பு அல்லது சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் அல்லது தீநுண்மி தடுப்பு மருந்துகள் எதுவூம் இல்லை.
கொரோனாவைரசுகள் நிடோவைரசு வரிசையில், கொரோனவிரிடே குடும்பத்தில் ஆர்த்தோகொரோனவிரினே என்ற துணைக் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். இவை ஒரு நேர்மறை உணர்வூ கொண்ட ஒற்றைத்-தனிமைப்படுத்தப்பட்ட ஆர்.என்.ஏ மரபணு மற்றும் திருகுசுருள் சமச்சீர்மை அதிநுண்ணுயிர் அமைப்பு கொண்ட உறைசு+ழ் தீநுண்மிகள் ஆகும். இவற்றின் மரபணு அளவூ சுமார் 26 முதல் 32 கிலோபேசுகள் வரை இருக்கும்இ இது ஆர். என். ஏ தீநுண்மி ஒன்றிற்கு மிகப்பெரியதாகும்.
"கொரோனாவைரசு" என்ற பெயர் இலத்தீன் corona, கிரேக்க κορώνη (கொரீனா, "மாலைஇ மாலை") என்பதிலிருந்து உருவானது, அதாவது கிரீடம் அல்லது ஒளிவட்டம் எனப் பொருள். இது இலத்திரன் நுண்ணோக்கி மூலம் முதிர்ந்த நச்சுயிரிகளின் (தீநுண்மிகளின் தொற்று வடிவம்) சிறப்பியல்புத் தோற்றத்தைக் குறிக்கிறது, இது பெரியஇ குழிவான மேற்பரப்பு கணிப்புகளின் விளிம்பைக் கொண்டுள்ளது, இது ஒரு அரச கிரீடம் அல்லது சு+ரிய கொரோனாவை நினைவூ+ட்டுகிறது.
அறிகுறிகளும் தற்போதைய நிலைம்
கொரோனா வைரஸ் எப்போது வேண்டுமானாலும் வெளிப்படலாம். அதனால் சாதாரன அறிகுறிகளையும் அலட்சியப்படுத்த வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துவருகிறார்கள். கோவிட் 19 தொற்று நோய் அறிகுறிகளில் முதன்மையானது சளி, காய்ச்சல், வறட்டு இருமல். ஆனால் இவை சாதாரணமாக வந்தாலே அதற்கு காரணம் வைரஸ் தொற்றுதான். ஆனால் சாதாரண வைரஸ் தொற்று வந்தாலே அது கொரோனா அறிகுறிதான் என்ற அச்சத்தில் மக்கள் உறைந்திருக்கிறார்கள். இதனால் சளி, இருமல் வந்தாலும் கை வைத்தியமோ அல்லது சுயமாக மாத்திரைகளோ எடுத்துக் கொள்கிறார்கள். தற்போது இந்தியாவிலும் கொரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில் மக்கள் போதிய விழிப்புணர்வூடன் இருக்க வேண்டும் என்று அறிவூறுத்துகிறார்கள் மருத்துவர்கள். அதேநேரம் சளி, இருமல் பிரச்சனை இருக்கும் போது அவை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேல் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது இந்த நேரத்தில் முக்கியம் என்றும் கூறுகிறார்கள். முடிந்தவரையிலும் உங்களுக்கு அறிகுறி தெரிந்தால் நீங்களே உங்களை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது. நாம் அலட்சியப்படுத்தும் அறிகுறிகள் பலவூம் சமயத்தில் வைரஸ் தொற்றாக இருக்கவூம் வாய்ப்புண்டு என்பதால் வரும் முன் காப்போம் என்பதற்கேற்ப குணப்படுத்துவதும் அவசியம் என்பதை இத்தருணத்தில் உணர்ந்து கொள்ளுங்கள்.
கடந்த மூன்று மாத காலத்தில் இந்த கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 இலட்சத்தை கடந்துள்ளது. இந்த தொற்றுக்கு இதுவரை 33983 பேர் பலியாகியிருப்பதும் மக்களி.டையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியூள்ளது. இந்நிலையில் இலங்கையில் இன்று வரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்து காணப்பட்டது
இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 11 பேர் பூரண குணமடைந்து உள்ளதுடன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 31 முதல் - ஆரம்ப கட்ட நிலை
2019 டிசம்பர் மாதம் முதலாம் திகதி சீன நாட்டின் ஊகான் நகரில் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு கண்டறிப்படமுடியாத வைரஸ் ஒன்று இறுப்பதைக் கண்டு வியந்து போகிரார் வைத்தியர் பின்னர் ஐந்து நாட்கள் கடந்த நிலையில் குறித்த நபரின் மனைவியூம் அதே போன்று காய்ச்சலினால் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். இருவருக்கும் ஒரே விதமான நோய் அறிகுறிகள் தென்பட்டுள்தை தொடர்ந்து முதல் நபர் குறித்த தேடலில் ஊகான்நகரின் பேசப்படக்கூடிய மிகப்பெரிய சந்தையான கடல் உணவூச்சந்தையோடு தொடர்புடையவர் என்பது தெறிய வந்தது.
டிசம்பர் 25ஆம் திகதி குறித்த நோயானது சார்ஸ் போன்றதொரு தொற்று நோய் எனக் கூறிய வைத்தியர் லீ வென்லியான் தனக்கு கீழ் பணிபுறியூம் வைத்தியர்களுக்கும் இது தொடர்பில் சொன்னதுடன் குறித்த தொற்று குறித்து கவணம் செலுத்தவூம் வேண்டிக்கொண்டார்.
டிசம்பர் 31ஆம் திகதி ஊகான்நகரில் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்டிருப்பது மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவூவதற்கான ஆதாரம் இல்லை என அறிக்கை வெளியிடப்பட்டது.
அதே நாளில் குறித்த காய்ச்சல் குறித்து எச்சரிக்கை விடுத்த வைத்தியர் லீயிடமிருந்து எச்சரிக்கை விடுத்தமைக்காகவூம் தகவல் வெளியிட்டதற்காகவூம் சீன அரசு மண்ணிப்புக் கடிதம் வாங்கிக் கொண்டதுடன் சீன நாட்டின் சுகாதார ஆணையம் முன்பின் தெறியாத நோய் குறித்து எந்தவொரு தகவலும் வழங்க வேண்டாம் என உத்தரவூ பிறப்பித்தது. அதுமட்டுமல்லாமல் ஊகான்நகரில் சேகரிக்கப்பட்ட தரவூகள் மற்றும் மாதிரிகளை அழிக்கவூம் ஹூபே சுகாதார ஆணையம் உத்தவிட்டது.
பின்னர் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி குறித்த காய்ச்சலுக்கான (நோயிற்கான) காரணத்தை கண்டு பிடித்துவிட்டதாக (கொரோன கொவிட்-19) சீனா புதிய ஒரு அறிவிப்பை விடுத்தது.
ஆரம்பத்தில் உதாசீனமாக பார்த்த சீனா 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் திகதி குறித்த நோய்ப்பரவலினால் பாதிப்புற்றவர்கள் ஊகான்- கடல் உணவூச்ந்தையூடன் தொடர்புடையவர்கள் என்றும் அது மனிதரிலிருந்த மனிதருக்கு பரவ ஆதாரம் இல்லை என மீண்டும் அறிவித்தது.
2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதியன்று சினாவூக்கு வெளியே சம அறிகுறிகளுடன் தாய்லாந்;தில் ஒருவர் காய்ச்சலினால் பாதிக்கப்ட்ட ஒருவார் பதிவானார். அவர் மேற்குறிப்பிட்;ட கடல் உணவூச் சந்தையூடன் தொடர்பில்லாதவர் எனவூம் தாய்லாந்து அறிவித்தது. 14ஆம் திகதியன்று அவ்வாறே ஜப்பானிலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.
இவ்வாறு சீனாவின் ஊகான்நகரை மட்டுமல்லாமல் நாட்டையே கடந்து தங்கள் நாட்டில் கண்டறியப்பட்ட நோய் பரவி வருகின்ற சந்தர்ப்பத்தில் சிந்திக்க வேண்டிய நாடுஇ எக்கவலையூம் இல்லாமால் சீன நாட்டின் புது வருட கொண்டாட்டத்திற்கான ஒன்று கூடலுக்கு அனுமதி வழங்கியது. குறிப்பிட்ட புது வருட கொண்டாட்டத்தில் 40000 பேருக்கும் அதிகமான எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொல்லவூம் அனுமதிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.
ஜனவரி மாதம் 20ஆம் திகதி சீனாவின் ஹூவங்டாங் நகரில் மற்றுமிரு நோயாளர்கள் பதிவானதோடு கொரோனா கொவிட்-19 என்கிற இந்த வைரஸ் மனிதரிலிருந்து மனிதருக்கு பரவூகின்றது என சீனா முதன் முதலாக அறிவித்தது.
மறுநாளே (ஜனவரி மாதம் 21ஆம் திகதி) அமெரிக்காவில் முதலவாது நோயாளர் பதிவானார் குறித்த நபர் ஆறு தினங்களுக்கு முன்னர் சீனாவிலிருந்து அமெரிக்கா திரும்பியிருந்தமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.
அன்றுவரை சீனா சொல்லும் கதைகளை மட்டும் கேட்டுக் கொண்டிருந்த உலக சுகாரதார நிறுவனம் ஜனவரி மாதம் 22ஆம் திகதி தனது குழுவொன்றை ஊகான்நகருக்கு அனுப்பி வைத்தது. குழுவின் ஊகான்பயணத்தின் பின்னர் உலக சுகாரதார நிறுவனம் குறித்த வைரஸ் குறித்த தகவல்களை வெளியிட்டதுடன் கொரோனா கொவிட்-19 வைரஸானது மனிதரிலிருந்து மனிதருக்கு பரவூம் என்று உறுதியூடன் அறிவித்ததுடன் ஊகான்நகரை தனிமைப்படுத்தியது.
தொடரும்…