கொரோனா நோயை காரணம் காட்டி பாராளுமன்ற பொதுத் தேர்தலை ஒத்தி வைக்கப்படாது-அமைச்சர் பந்துல குணவர்தன

கொரோனா நோயை காரணம் காட்டி பாராளுமன்ற பொதுத் தேர்தலை ஒத்தி வைப்பதற்கான எந்தவித நோக்கமும் இல்லை என்று தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பாக முன்னெடுக்கப்படும் வதந்திகளை முற்றாக நிராகரிப்பதாகவும் அவர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் தேர்தலில் அமோக வெற்றி உறுதி என்பதை தெளிவாக காணக்கூடிய நிலையில் பொது தேர்தலை ஏன் ஒத்திவைக்க வேண்டும் என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

அரசியல் கட்சி பல்வேறு பிரிவுகளாக பிளவு பட்டுள்ளன. இவ்வாறான கட்சிகளுக்கு தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற தேவை இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் இவ்வாறானோரே வதந்திகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தேர்தல் நடத்துவது தொடர்பில் அனைத்து தீர்மானங்களையும் மேற்கொள்வது சுயாதீன தோர்தல் ஆணைக்குழுவினாலேயே ஆகும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -