இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா இரத்து!!!


பல்கலைக்கழக ஊடக பிரிவு-

லங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா இரத்து. கொவிட்19 (COVID19) வைரஸ் அச்சத்தினை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்களை நாளை 14.03.2020 ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

 இத்தீர்மானத்திற்கு இணங்க இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினையும் இரண்டு வாரங்களுக்கு மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆதலால் எதிர்வரும் மார்ச் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா இரத்துச் செய்யப்படுகின்றது என்பதனை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச். அப்துல் சத்தார் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -