காரைதீவு நிருபர்சகா-
காரைதீவு பிரதேசசபைக்கு உட்பட்ட இதுவரை இனங்காணப்பட்டிராத மாவடிப்பள்ளி மேற்கு எல்லைவீதியை
காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் மக்களின் பாவனைக்காக திறந்து கையளித்தார்.
மாவடிப்பள்ளியில் அமைந்துள்ள மேற்கு எல்லை வீதியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம் என் எம் ரணீசின் தற்துணிவால் பிரதேச சபை தவிசாளர் கே. ஜெயசிறிலின் உதவியுடன் நேற்று மக்களின் பாவனைக்கு திறந்து வைத்துள்ளார்.
தவிசாளர் ஜெயசிறில் அங்கு உரையாற்றுகையில்:
சகோதர முஸ்லிம் மக்களின் மாவடிப்பள்ளிக் கிராமம் உருவாகியதில் இருந்து இன்றுவரை இந்த வீதி இருப்பதை மக்கள் குறிப்பாக இன்றைய இளைஞர்கள் அறிந்திருப்பார்களா என்றால் அது கேள்விக்குறியே.
அப்படி இருக்கும் போது இவ்வாறன் விடயங்களை உறுப்பினர் ரணீஸ் அதில் கரிசனயுடனும் பொறுப்பாகவும் நடந்து கொள்கின்றமை பாராட்டத்தக்கது.
இதற்கு முன்னரும் மாவடிப்பள்ளி கிழக்கு எல்லை வீதியை மக்களுக்கு அறிமுகப்படுத்தி அதற்கான அடுத்தகட்ட வேலைகளை மிக விரைவாக மேற்கொண்டு மக்களின் போக்குவரத்துக்கு உகந்ததாக மாற்றிய பெருமையும் அவ்உறுப்பினருக்கே சேரும் .
அதே முயற்சியை இன்று செய்து கிராமத்தின் மேற்கு எல்லை வீதியையும் மக்களுக்கு திறந்து வைத்திருப்பது ஊர்மக்களின் மத்தியில் அவர்மீதான ஓர் நல்லெண்ணத்தை உருவாக்கியுள்ளதுடன் காலத்துக்கு காலம் இது மக்களிடத்தில் நினைவில் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இங்குள்ள வீதிவிளக்கு தொடர்பாக இங்குள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சிகொண்ட சிலர் என்மீது இனத்துவேச கருத்துக்களைக்கொட்டி என்னை இனவாதியாக சித்திரித்தனர். வீதிஅபிவிருத்தி அதிகாரசபையுடன் கலந்துரையாடிய பின் இப்போது உண்மைநிலை வெளிவந்துள்ளது. என்னைப்பொறுத்தவரையில் எனது பரப்பிற்குள்வரும் அனைத்துமக்களும் எனது மக்களே. என்னிடம் எந்தஇனமத வேறுபபாடும் கிடையாது.
என்றார்.
இவ்வாறான ஊர் எல்லை விடயங்களில் உறுப்பினர் பிரதேச சபைக்கு வந்ததில் இருந்து இன்றுவரை செய்த பிரயத்தனமானது பாராட்டக்கூடியது எனவும் இவ்வாறான விடயம் உங்களது ஊர் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும் என்று தவிசாளர் வருகைதந்த மக்களிடம் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில் பிரதேச சபை செயலாளர் அ.சுந்தரகுமார் மாவடிப்பள்ளி மேற்கு கிராம சேவக உத்தியோகத்தர் அஸ்லம் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஜலீல் மற்றும் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் இளைஞர்கள்இ போராளிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.