அ.இ.ம.காங்கிரஸில் மீண்டும் இணைந்து கொண்டார் வை.எல்.எஸ்.ஹமீட் !

கில இலங்கை மக்கள் காங்கிரசின் ஸ்தாபகச் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஆகியோருக்கிடையேயான சமாதான பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டு மீண்டும் கட்சியில் இணைந்து கொண்டதாக கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் இம்போட்மிரருக்குத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்...

அம்பாரை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து போட்டியிட தீர்மாணித்துள்ளதுடன் கட்சிக்கு கிடைக்கும் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவியை கல்விமான் சட்ட வல்லுனர் கட்சியின் ஸ்தாபகரில் ஒருவரான வை.எல்.எஸ்.ஹமிட் அவர்களுக்கு வழங்குவது என்றும் தலைமை ஒப்புக்கொண்டமைக்கு அமைய இத்தேர்தலில் அவரும் போட்டியிட்டு கட்சியின் வெற்றிக்கு முழுமூச்சாய் பணி செய்வார் என்று தெரிவித்தார்.


மேலதிக விபரம் பின்னர் வழங்கப்படும்.. குறித்த தகவல் தொடர்பில் வை.எல்.எஸ்.ஹமீட் அவர்களில் கருத்தினைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தும் முடியாமல் போய்விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -