மின்னொழுக்கினால் அகாலமரணமடைந்த மகளின் பெயரால் பஸ்தரிப்புநிலையம்! இது ஒரு முன்னுதாரணம்!!

காரைதீவு நிருபர் சகா-
ற்றைக்கு ஆறுமாதங்களுக்கு முன்பு மின்னொழுக்கினால் அகாலமரணமடைந்த காரைதீவைச்சேர்ந்த பருவவயது மாணவி செல்வி நடேஸ்வரராஜா அக்ஷயா ஞாபகார்த்தமாக பஸ்தரிப்பு நிலையமொன்றை அமைக்கப்பட்டுள்ளது.

இது மக்கள்சேவைக்கான ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது என பலரும் தெரிவித்தனர். க.பொ.த.உயர்தரம் பயின்றுகொண்டிருந்த இளம்மாணவி அக்ஷயா அகாலமரணமடைந்த செய்தி அனைவரினதும்மனங்களை நெகிழச்செய்தது தெரிந்ததே.

அவர் ஞாபகார்த்தமாக கல்லறை அமைத்தஅதேவேளை அவர்நினைவாக பெற்றோர் காரைதீவு பிரதான வீதியில் குறிப்பாக விஸ்ணு ஆலயத்திற்குச்செல்லும் சந்தியினருகே நிருமாணித்தனர்.அதற்கு "அக்ஷயா நினைவகம் " எனப் பெயரிட்டுள்ளனர். அதனை மக்கள் பாவனைக்கு விடுமுகமாக மரணித்தஅக்ஷயாவின்தந்தையார் நடேஸ்வரராஜன் மற்றும் உறவினர்கள் சேர்ந்து காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி. ஜெயசிறிலிடம் இன்று (8)ஒப்படைத்தனர்.

இப்பஸ்தரிப்பு நிலையத்தை தவிசாளர் ஜெயசிறில் நாடா வெட்டித்திறந்துவைத்துமக்கள் பாவனைக்காக விட்டார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -