சிறையில் இருந்தவாறு தேர்தலில் போட்டியிட அனுமதிபெற்ற பிள்ளையான்...


முகம்மட் நசீர்-
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) நாடாளுமன்ற தேர்தலில்; போட்டியிடுவதற்காக மட்டு சிறைச்சாலையில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு அனுமதி வழங்கி அதற்கான உரிய நடவடிக்கையை செய்யுமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு இன்று வியாழக்கிழமை (12 சிவில் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ் கட்டளையிட்டுள்ளார்.

கடந்த 2005 ம் ஆண்டு டிசம்பர் 25 திகதி பாராளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கம் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் உட்பட 5 பேரை சந்தேகத்தில் 2015-10-; 11 ம் திகதி கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) சிறையில் இருந்து போட்டியிடுவதற்காக சிவில் நீதிமன்றில் அனுமதியை கோரியிருந்தார் இதனையடுத்து இன்று வியாழக்கிழமை (12) சிவில் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ் பரீசிலனைக்கு எடுத்து கொண்டார்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று 12 திகதியில் இருந்து 19 திகதி வரையிலான காலத்திற்குள் வேட்பு மனுதாக்குதல் செய்வதற்காக அனுமதியை வழங்கியதுடன் இந்த வேட்பு மனு தாக்குதலை சிறைச்சாலையில் மேற்கொள்ளுமாறும் அதற்கான உரிய நடவடிக்கையை சிறைச்சாலை அத்தியட்சகர் மேற்கொள்ளுமாறும் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -