இது குறித்து வெளியிட்டு விஷேட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
முழு உலகை ஆட்கொண்டுள்ள கொரோணா வைரஸ் இலங்கையிலும் பரவும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது அண்மையில் வெளிநாட்டில் இருந்து வந்த 19 பேர் மேலதிக சிகிச்சைக்காக தோற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் (IDH) அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது இலங்கை நாடு எதிர்நோக்கியுள்ள மிகவும் மோசமான ஆபத்தான நிலைமையாகும் இதிலிருந்து விடுபடவும் ஆரம்ப கட்டத்திலே இதனை தடுப்பு நடவடிக்கைகளை மேற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தில் மிகவும் அவதானத்ததுடன் மக்கள் செயல்பட வேண்டும்.
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! 2:155 என்ற புனித அல்குரானின் வசனத்துக்கு அமைய நம்மை பரிபாலிக்கும் இறைவனுடைய சோதனைகளில் ஒன்றாக எடுத்துக்கொண்டு அல்லாஹ்வை முற்றிலும் வழிப்பட்ட சமூகத்தை உருவாக்கவும் மிகச் சிறந்த முறையில் சமூகத்தை நெறிப்படுத்தவும் தேவையான அறிவுறுத்தல்களை பள்ளிவாசல் தலைமைகள், உலமாக்கள் விரிவான முறையில் வழங்கவும் வேண்டும்.
அரசு தற்போது அவசர நிலையை பிரகடனப்படுத்தி அனைத்து பாடசாலைகளையும் மூடியுள்ள நிலையில் இதற்கு மேலதிகமாக பொதுமக்கள் ஒன்றுசேரும் இடங்கள் தனியார் கல்வி நிலையங்கள் பல்கலைக்கழகங்கள் சுற்றுலா தளங்கள் வங்கிகள் ஷாப்பிங் மோல்கள் உட்பட அனைத்து இடங்களிலும் இது குறித்த அவதானத்தை ஏற்படுத்தும் வகையில் ஒழுங்கு நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.