கொரோனா பீதியால் மலையக சுற்றுலா பயணிகளின் வருகை குறைவு நடைபாதை வியாபாரிகள் பாதிப்பு.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம் விசேட நிருபர்.
கொரானா எனப்படும் கொவிட் 90 என்ற வைரஸ் நோயின் பீதி காரணமாக மலையகப்பகுதியில் உள்ள சுற்றலா பிரதேசங்களுக்கு பயணிகள் வரும் எண்ணிக்கை பாரியளவில் வீழ்;ச்சி கண்டுள்ளதாகவும், இதனால் தங்களது வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்புக்குள்ளாகயிருப்பதாக நடைபாதை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
நேற்று (12) திகதி இலங்கையில் கொரோனா வைரஸ் ;தொற்றுக்கு உள்ளான இரண்டு இலங்கை நபர்கள் கண்டு பிடிக்கப்பட்டதனை தொடர்ந்து அரசாங்கம் வைரஸ்ஸினை கட்டுப்படுத்தும் நோக்கிலும்,பொது மக்கள் மாணவர்களை பாதுகாப்பதற்காகவும் முதலாம் தவணை விடுமுறையினை முன்கூட்டியே வழங்கியது.
இதனால் பாடசாலைக்கு இன்று (13) திகதி முதல் ஏப்ரேல் 20 திகதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டதன் காரணமாக மக்கள் பொது இடங்களுக்கு செல்வதனை தவிர்த்துக்கொண்டுள்ளனர்.இதனால் மலையகப்பகுதிகளில் நாளாந்தம் சுமார் 4000 தொடக்கம் 5000 வரை சுற்றுலா பிராயாணிகள் வரும் பிரதேசங்களான டெவோன்,சென்கிளயார், போன்ற சுற்றுலா பிரதேசங்களில்; பாரிய அளவில் குறைவடைந்துள்ளதாக இப்பிரதேசத்தில் வசிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த சுற்று பிரயாணிகளின் வருகை குறைவடைந்தமையினை தொடர்ந்து இவர்களின் இவர்களின் வாழ்தாரம் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதே வேளை கொரானா ஆட்கொல்லி நோயின் அச்சுறுத்தல் காரணமாக எதிர்க்காலத்தில் பாரிய அளவில் சமையல் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் பெருமளவிலான மக்கள் சில்லறை வர்த்தக நிலையங்களில் குவிந்து பொருட்கள் கொள்வனவு செய்வதனை காணக்கூடியதாக இருந்தன.இதனால் சில்லறை வர்த்தகம் சூடு பிடித்திருந்தன.
இது குறித்து பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில்....
இதே வேளை உலகலாவிய ரீதியில் 129 நாடுகளில் 135866 பேர் இந்த ஆட்கொல்லி தொட்டுக்கு உள்ளாகியிருப்பதாகவும் இதில் 4 992 பேர் இறந்துள்ளதாகவும்,70 427 பேர் குணமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -