சுகாதார, பாதுகாப்பு, பொலிஸ், பொருட்கள் விநியோகம், சுங்க நடவடிக்கை, மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் விநியோகம் என்பன ஏனைய அத்தியாவசிய சேவைகளாகும்.
எனவே, ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியிலும் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்காக குறைந்த ஊழியர்களுடன் இலங்கை மத்திய வங்கி, அனைத்து வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், அவற்றின் கிளைகள் மற்றும் திறைசேறி என்பவற்றை திறந்து வைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தர மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் டபிள்யு.டீ. லக்ஷ்மனுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியும், ஜனாதிபதியின் செயலாளர், பிரதான பணிக்குழாம் மற்றும் ஜனாதிபதி அலுவலகம் என்பன தினமும் சேவை நிமித்தம் முழுமையான செயற்பாட்டில் இருப்பதாகவும் கலாநிதி ஜயசுந்தர தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.