ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட செயற்பாட்டாளர்களுடன் கண்டி அலுவலகத்தில் நேற்று மாலை (13.03.2020) நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
" தமிழ் முற்போக்கு கூட்டணியினராகிய நாம் கொள்கையை உயிர்மூச்சாகக்கருதி மக்களுக்கான அரசியலையே முன்னெடுத்துவருகின்றோம். இதன்காரணமாகவே நல்ல எண்ணங்களைக்கொண்ட தலைவராக திகழும் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதித் தேர்தலின்போது ஆதரவு வழங்கினோம். எமது கோரிக்கையை ஏற்று மலையக மக்கள் அவருக்கு முழு ஆதரவை வழங்கினார்கள்.
'சின்னத்துக்கு' அடிமையாகி, எண்ணங்களை மறந்து மக்கள் வாக்களித்தகாலம் மலையேறிவிட்டது. இன்று சிறந்த அரசியல்வாதிகள் யார், எந்த பக்கம் சிறந்த கொள்கை இருக்கின்றது என்பதை பகுத்தறிந்தே பெரும்பாலான மக்கள் வாக்குரிமையை பயன்படுத்துகின்றனர்.
என்னிடம் சிறந்த எண்ணங்கள் இல்லாமல், சேவைகளை வழங்காமல் இருந்திருந்தால் எந்த சின்னத்தில் பாராளுமன்றம் தெரிவாகியும் பயன் இல்லை. வேலுகுமாரிடம் சிறந்த எண்ணங்களும், மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் கொள்கையும் இருப்பதால் அதனை அடிப்படையாகக்கொண்டே மக்கள் வாக்களிப்பார்கள். " - என்றார்.