தொடர் போராட்டத்திற்கு அழைப்பு - இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின்.


எச்.எம்.எம்.பர்ஸான்-
சிரியர், அதிபர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்காக தொடராக மூன்று நாள் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க இலங்கை ஆசிரியர் சங்கம் முன்னெடுத்துள்ளது.

இது தொடர்பில் ஓட்டமாவடிக்கு விஜயமொன்றினை மேற்கொண்ட இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில்,

நாங்கள் கடந்த வருடம் மார்ச் மாதம் 13ம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் ஒன்றினை செய்தோம். அதற்குப்பின்னர் செப்டம்பர் மாதம் 26,27 ஆகிய திகதிகளில் இரண்டுநாள் வேலைநிறுத்தம் செய்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை செய்தோம். அந்தநேரம் அமைச்சரவை ஆணைக்குழு ஒன்றை உருவாக்கி ஒக்டோபர் மாதம் 1 ம் திகதி ஆசிரியர், அதிபர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு முடிவெடுக்கப்பட்டதுடன், ஆசிரியர் சேவை வரையறுக்கப்பட்ட சேவையாக்கி சம்பளம் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எவ்விதமான தீர்வும் கிடைக்கவில்லை.

தற்போது புதிய அரசாங்கம் வந்ததன் பின்னர் சம்பள அதிகரிப்புத் திட்டத்தை அமுல்படுத்துமாறு நாங்கள் பல அழுத்தங்கள் கொடுத்தோம். அதேபோன்று பெப்ரவரி மாதம் 14 ம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் செய்தோம் அதற்கும் எங்களுக்கு எவ்வித முடிவும் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து பெப்ரவரி மாதம் 26 ம் திகதி கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்து முழு இலங்கையிலும் பாடசாலைகளை மூடி நாங்கள் அடையாள வேலைநிறுத்தம் செய்தோம் ஆனால் அதற்கும் பதிலில்லை.

அதன் தொடரில் எதிர்வரும் 16ம் திகதி தொடக்கம் 18 ம் திகதி வரை மூன்று நாள் வேலைநிறுத்தம் செய்வதற்கு தீர்மானித்துள்ளோம்.

நாங்கள் ஆறு அம்சங்கள் கொண்ட கோரிக்கைகளை முன்வைத்து இப் போராட்டத்தை மூன்று நாட்களாக நடாத்த திட்டமிட்டுள்ளோம்.

இதில் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலை ஆசிரியர்களும், அதிபர்களும் ஒத்துழைப்புக்களை வழங்கி இப் போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும்.
எங்களுடைய தொழிற்சங்க நடவடிக்கைகளை அவதானித்து எங்களுக்கு தீர்வுகளைப் பெற்றுத் தாருங்கள் என்று நாங்கள் அரசாங்கத்திடம் வற்புறுத்தி சொல்கிறோம் என்றார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -