கொரோணா நோய்த் தொற்றுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனரா என அறிவதற்கு பதின் நான்கு நாட்கள் தனிமை



எஸ்.எம்.எம்.முர்ஷித்.
கொரோணா நோய்த் தொற்றுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனரா என அறிவதற்கு பதின் நான்கு நாட்கள் தனிமைப் படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பின் கீழ் உட்படுத்தும் நடவடிக்கை நேற்று (10) மட்டக்களப்புbatticaloa campus இலும் கந்தக் காடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புனர்வாழ்வு நிலையத்திலும் 181 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இத்ததாலி, தென் கொரியா போன்ற பகுதிகளில் இருந்து இலங்கைக்கு வந்த இலங்கைப் பிரஜைகள் 179 பேரும் தென் கொரியப் பிரஜைகள் இருவருமாக இரண்டு விமானங்களில் நேற்று செவ்வாய்க் கிழமை அதிகாலை கட்டுநாயக்காவை வந்தடைந்தனர்.
வெளிநாட்டிலிருந்து வருகை தந்த இலங்கை நபர்களுக்கு கொரோணாத் தொற்று இல்லை என்பதுடன் மேலும் 14 நாட்கள் தனிமைப் படுத்தி வைப்பதன் மூலம் நோய்த் தொற்றினை உறுதிப் படுத்திக் கொள்வதன் முகமாகவும் நாட்டின் கொரோணா நோய் பரவாமல் நாட்டைக் காக்கும் நோக்குடனே அவ்வாறான முகாம்களில் தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
கட்டுநாயக்க விமான நிலயத்திலிருந்து ஏழு பஸ்களில் வந்தவர்களில் இரண்டு பஸ்களில் வந்தவர்கள் டீயவவi உயஅpரள இல் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதில் ஆண்கள் 29 பேரும் பெண்கள் 09 பேரும் சிறுவர்கள் 03 பேரும் மொத்தம் 41 பேர்களாகும். கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் 5 பஸ்களில் வந்த 140 பேரும் தனிமைப் படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் இராணுவ வைத்திய அதிகாரிகளே இவ் மருத்துவ சோதனையில் பங்கெடுத்து வருவதுடன் அவர்களுக்கான உணவு, படுக்கையறை சகல வசதிகளையும் இராணுவமே பொறுப்பேற்று நடத்தி வருவது குறிப்பிடத் தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -