உலக நாடுகள் பலவற்றை உலுக்கிக்கிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் எமது இலங்கைத் திருநாட்டிற்கும் விதிவிலக்கல்ல என்றாகி விட்டது. நாளுக்கு நாள் எமது நாட்டிலும் கொரோனா தோற்றாளர்கள் அதிகரித்து செல்லும் நிலை காணப்படுகிறது எனவே அரசாங்கம் இது தொடர்பாக காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்ற போதிலும் எத்தனை பேர் இத்தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர் அவர்கள் எங்கு எங்கு இருக்கின்றார்கள் என்பது தொடர்பாக கண்டறிவதற்கு நீண்ட நாட்கள் கூட தேவைப்படலாம் .
மக்கள் எதோ ஒருவகை மன பீதியுடன் வாழுகின்ற சூழல் உருவாகியிருக்கின்றது இச் சமயத்திலே தேர்தலை ஒத்திவைப்பதே அனைவருக்கும் உகந்தது என தேர்தல் கண்காணிப்பு கபே அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளர் தேசமானி மீராசாகிபு தெரிவித்துள்ளார் .
அவர் மேலும் தெரிவிக்கையில் எமது நாடு பல்வேறு அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்து மீண்டெழும்பியதொரு நாடு தற்போது ஏற்பட்டிருக்கும் இந்தக் கொடூரமான வைரஸ் தாக்கத்திலிருந்தும் விடுபடும் அதற்கான ஆக்கபூர்வமான வேலைத்திட்டத்தினை எமது நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் வழிநடத்தலின்கீழ் சகல தரப்பினரும் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நடவடிக்கைகளுக்கு எமது மக்கள் பூரண ஒத்துழைப்பினை நல்க வேண்டிய அதே சமயம் தங்களது சுய பாதுகாப்பிலும் தங்களது அன்புக்குரியவர்களின் பாதுகாப்பிலும் அக்கறையுடன் நடந்துகொள்வது அவசியம் .
எனவே இந்த புதுவிதமான கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக எமது மக்கள் பல்வேறு நியமங்களுக்கு மத்தியில் குழம்பிப்போய் இருக்கின்ற சமயத்தில் தேர்தல் ஒன்றை நடாத்துவதென்பது உசிதமான நடவடிக்கையாக தோன்றவில்லை எனவே மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் தேர்தல் தொடர்பான விடயத்தில் உரிய நேரத்தில் சமயோசிதமாக முடிவு ஒன்றினை எடுப்பார் என தாம் எதிபார்ப்பதுடன் எது எவ்வாறிருப்பினும் தேர்தலை ஒத்திப்போடுவதே சாலச் சிறந்தது எனவும் அவர் தெரிவித்தார்.