உணவும் நோயும் இயற்கையல்லாத உணவு வகைகளும், பாணங்களும் உடலில் நச்சுத்தன்மையை உண்டாக்கும்.


நேர்காணல்:- பைஷல் இஸ்மாயில்


வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர்
பணிப்பாளர்,
ஆயுர்வேத ஆராய்ச்சி தொற்றாநோய் வைத்தியசாலை,
நிந்தவூர்.

கேள்வி:- உணவு எவ்வாறு நோய்களுக்கு முக்கியமானது?

பதில்:- ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு மிக அவசியமானதொன்று அவர்கள் உட்கொள்ளும் நிறை உணவாகும். இந்த நிறை உணவுகளை எடுப்பது அவர்களின் வாழக்கைக்கு ஆரோக்கியமானது. அதில் அதிகமான மரக்கறி வகைகளை உண்ணவேண்டும். ஒருவேளை உணவில் ¾ பகுதி காய் கறிகள் உள்ளடக்கப்பட வேண்டும். இவற்றைவிட்டு கயளவ கழழன முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டிய உணவாகும். உணவுகளை நேரத்திற்கு உண்ணவேண்டும். மாமிச வகைகளைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக டீசழடைநச உhiஉமநnஇ மாட்டிறைச்சி போன்றவற்றைத் தவிர்ப்பது ஒருவரின் நீண்ட ஆயுளுக்கு நன்மை பயக்கும்.
அன்றாட வாழ்க்கையில் தினமும் நாம் உண்ணக்கூடிய உணவுகளும் பருகக்கூடிய பாணங்களும் செயற்கையானவையாகவோ அல்லது குறிப்பிடத்தக்க அரு இயற்கையான உணவில் இருந்து வேறுபட்டதாகவோ காணப்படுகின்றன. அனேகமானவர்கள் சந்தையில் கிடைக்கக்கூடிய பல்வேறுபட்ட உணவுகளையும் பாணங்களையும் விரும்பி நுகரக் கூடியவர்களாகவும் அவை பற்றி தவறான நம்பிக்கையை உடையவர்களாகவும் காணப்படுகிறார்கள்.

அதுமாத்திரமல்லாமல் நாம் உட்கொள்ளும் உணவுகள், பாணங்கள் பற்றி விசேட கவனம் செலுத்த வேண்டிய காலத்தில் வாழ்ந்துவருகின்றோம். ஏனென்றால் சந்தையில் விற்பனைக்கு வரும் மேற்படி உணவு வகைகளிலும், பாணங்களிலும் அடங்கக்கூடிய இரசாயனப் பொருட்கள் மிக ஆபத்தானவையாகவே இருக்கின்றது. இதுபற்றி தெரியாமலே நாம் இவ்வகையான உணவுகளை எடுத்துவருகின்றோம்.

கேள்வி:- எவ்வாறான உணவுகள் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது?

பதில்:- பக்கட்டுக்களிலோ அல்லது போத்தல்களிலோ அடைத்து சந்தையில் விற்பனை செய்யப்படும் உணவுகள் யாவும் அது பழுதடைந்து செல்லாமல் பாதுகாக்கவும், சுவைகளை ஊட்டவும், நிறங்களை கொடுக்கவும் ஆபத்தான இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவைகள் உடல் நலத்துக்கு மிகவும் கெடுதி விளைவிக்கக் கூடியது என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.
சுவையூட்டிகள் இயற்கையான வௌ;வேறு வகை பழ வர்க்கங்கள் போன்றவற்றின் சுவைக்கு நிகரான இரசாயன பகுப்புக்களாகவும் இவைகள் இருக்கலாம். இது (குடயஎழரசள) என்று குறிப்பிடுவார்கள். வெறும் தண்ணீருக்கு அப்பில் சுவையூட்டியை கலந்தால் அது அப்பில்போல சுவையை கொடுக்கும். இவ்வாறான சுவையூட்டிகள், உணவுச் சமிபாட்டை சிக்கல் செய்யவும், மூளைக்கலங்களை பாதிக்கவும் அதிக வியர்வையை உருவாக்கவும், இரத்தம் தொடர்பான கோலாருகளை உருவாக்கவும் அமைகின்றது.
பொதுவாக நாம் நுகரக்கூடிய நூட்ல்ஸ் வகைகள், சூப் கட்டிகள், சொஸோக் ஜேம், அச்சாறு, சட்னி, புடிங் வகைகள், சொக்லட், டொபி, ஜெலி வகைகள், ஐஸ்கிரீம், மென்பானங்கள். சோடியம் வகைகள், கோதுமை மாவினால் செய்யப்பட்ட பேக்கரி உணவு வகைகள், முறுக்கு உணவுகள், பொறியல் உணவுகள் வௌ;வேறு விதமான பிரைட்ரைஸ் வகைகள், சைனீஸ் என்று பெயர் வைக்கப்படும் உணவுகள் என்பன பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது.

சக்கரினை நாம் எடுத்துக்கொண்டால் அதில் தலைசுற்று, தலைவலி, புற்றுநோய்க்காரணி, நரம்புத் தளர்ச்சி போன்றவற்றை ஏற்படுத்தும் நாம் விரும்பிச் சாப்பிடும் ஐஸ்கிரீம் வகையிலும் இது காணப்படுகிறது. பேக்கரி இனிப்புப் பண்டங்கள் வண்ணவண்ண கேக் வகைகள், பிஸ்கட் வகைகள், குழந்தைகளுக்கான இனிப்பு வகைகள் போன்றவற்றில் இந்த நிறமூட்டிகள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இவை சிறுநீரகங்களை பாதிக்கவும், ஈரல் தொடர்பான நோய்களை தோற்றுவிக்கவும் இறைப்பை புற்றுநோயை உருவாக்கவும் காரணமாகிறது. உணவு கெடாமல் பாதுகாப்பதற்காக Pசநளநசஎயவiஎநச என்பார்கள். இவற்றினால் என்புகள் பலவீனம் அடைவதுடன் புற்று நோயையும் உருவாக்கின்றது.

இயற்கை உணவுபோல் அன்றி செயற்கை உணவுகளில் மிதமிஞ்சிய போசனை அகத்துறிஞ்சப்பட்டு ஆரோக்கிய கெடுதலையும் ஏற்படுத்தலாம். அவற்றில் அடங்கக் கூடிய கூடுதலான சக்கரை, உப்பு, கொழுப்பு, புரதம் என்பன கருத்திற் கொள்ளப்பட வேண்டும். இதன் விளைவாகவே அதிக பருமன் அதிக கொலஸ்ட்டோல், அதி குருதி அமுக்கம் என்பன ஏற்பட்டு இதய நோய்களை ஏற்படுத்துகிறது. மேலும் உடலில் சேரும் இன்னோரன்ன இரசாயனங்களின் விளைவாக நீரிழிவு நோய்க்கான வாய்ப்பும் உருதி செய்யப்படுகிறது. மிக அதிகமாக பாடசாலை செல்லும் மாணவர்கள் செயற்கை உணவுகளை அதிகமாக எடுப்பதனால் 28 வீதமான மாணவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் (றுர்ழு) புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

கேள்வி:- உணவுகளில் அடங்கியுள்ள அதிக போசாக்கு நோய்களை ஏற்படுத்த வாய்ப்புக்கள் உண்டா?

பதில்:- ஆமாம், என்புகள் பாதிக்கப்பட்டு முட்டுவருத்தங்களையும், சிறுநீரகக் கல், பித்தக்கல் என்பவற்றையும் உருவாக்கக் காரணமாகிறது. மேலும் இதே அமிலங்களினால் பற்களில் பாதிப்பை ஏற்படுத்தி பற்சிதவையும் உண்டுபன்னுகின்றன. அதிக கல்சியம் காரணமாக குழந்தைகளின் பல்வரிசையும் பாதிக்கப்படுகின்றது.

இது தவிர நாம் சாப்பிடக்கூடிய தொதல், மஸ்கட் என்பவற்றின் மூலம் சிறிய அலுமினியம் துகழ்கள் உடலை அடைகிறது. நாம் சமையலுக்கு பாவிக்கும் அலுமினிய பாத்திரங்கள் கரைந்து உணவில் அலுமினியம் சேறுகிறது. இது சிறுநீரகங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றது. மண் அல்லது சில்வர் பாத்திரங்களை நாம் சமையல் செய்ய பாவிப்பது மிகச் சிறந்ததாகும்.

கேள்வி:- உணவுகளினால் ஏற்படும் நோய்கள் என்ன?

பதில்:- உணவுகளில் காணப்படும் கொழுப்புக்கள் டுழற னுநளெவைல டுipழிசழவநin (டுனுடு) ஃ ர்டீடு வுசல புடலஉiநெ ழச வுழவயட ஊhழடநளவநசழட இவைகள் உடல் இயக்கப்பாட்டுக்கு பிரதான பங்கை வகிக்கின்றன. சாதாரணமாக டுழற னுநளெவைல டுipழிசழவநin (டுனுடு) வுபுஇ ளுவழசம வுழவயட ஊhழடநளவநசழட உடலில் குறைவாகவும் (குறைந்த உணவுகள்) ர்iபா னுநளெவைல டுipழிசழவநin (ர்னுடு) கூடுதலாகவும் (கூடிய உணவுகள்) ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
நாம் சாப்பிடும் இறைச்சி மற்றும் ஸொஸேஜெஸ் போன்றவை டுழற னுநளெவைல டுipழிசழவநin (டுனுடு) இனை அதிகரிக்கின்றன. டுழற னுநளெவைல டுipழிசழவநin (டுனுடு) இன் அளவு 100 இற்கு குறைவாகவும் 160 இற்கு உட்பட்டதாகவும் இருப்பதே ஆரோக்கியம். ர்iபா னுநளெவைல டுipழிசழவநin (ர்னுடு) 40 இற்கு குறைவாக இருப்பது நோய் நிலையைத் தோற்றுவிக்கும். 60 இற்கு அதிகமாக இருப்பதே சிறந்தது. 
இவ்வாறு இல்லாமல் போனால், சீனி வியாதி (னுயைடிநவநள)இ இருதய நோய் (ஊர்னு), பிரஷர் (ர்லிநசவநளெழைn), பக்கவாதம் (ளுவசழமந), கொளஸ்ட்ரோல் (ர்லிநசடipனைநஅயை), சிறுநீரக நோய் (முனைநெல னுளைநயளநள) போன்ற நோய்கள் மிக அதிகமாக ஏற்படக் காரணமாக அமைந்துவிடுகிறது. 

சீனி வியாதி (னுயைடிநவநள) இரத்தத்தில் காணப்படும் ஒரு நோயாகும். இருதய நோய் (ஊர்னு) எமது நாட்டில் பொதுவாக காணப்படுகின்ற நோய்களில் ஒன்றாகும். இதனால் ஏற்படும் இறப்புக்களே அதிகம். உணவுகளும் உணவிலுள்ள கொழுப்புக்களுமே இதற்கு பிரதான காரணங்களாக அமைந்து காணப்படுகின்றது.

பிரஷர் (ர்லிநசவநளெழைn), பக்கவாதம் (ளுவசழமந), கொளஸ்ட்ரோல் (ர்லிநசடipனைநஅயை), சிறுநீரக நோய் (முனைநெல னுளைநயளநள) போன்ற நோய்கள் நம் நாட்டில் காணப்படும் பிரதானமான தொற்றா நோய்களாகும். இவற்றினால் ஏற்படும் இறப்புக்கள் 75 வீதத்திலும் அதிகமாகும்.

கேள்வி:- நாம் அன்றாடம் உற்கொள்ளும் உணவுகளைக் கையாள்வதற்கான ஆரோக்கியமான வழிமுறைகளைக் குறிப்பிட முடியுமா?

உணவின் பாதுகாப்புக்கு சுத்தம் இன்றியமையாததாகும். ஏனெனில், சில விஷக்கிருமிகள் மண், நீர், பூச்சிகள், விலங்குகள் மற்றும் மனித உடல்களிலும் இருக்கின்றன. மேலும், கைப்பிடித் துணிகள், பாத்திரங்கள், வெட்டும் பலகைகள் மற்றும் கத்திகள் போன்றவற்றில் இருக்கின்ற கிருமிகள் இலகுவில் உணவில் சேர்ந்து உணவு மூலம் இலகுவாக எமது உடலில் பரவி பல நோய்களை ஏற்படுத்தக்கூடும். அதற்காக, உணவுகளைத் தயாரிக்கும்போதும், உணவைக் கையாளும் முன்பும், கையாண்டதன் பின்னரும் அடிக்கடி உணவுகளைக் கையால் தொடும்போதும் கைகளை நன்கு கழுவி சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

கழிவறைகளைப் பயன்படுத்தினால் உடன் கைகளை நன்றாகத் தேய்த்துக் கழுவுதல் வேண்டும். சமையலுக்குப் பயன்படுத்தும் இடங்கள், பாத்திரங்கள் போன்றவற்றை கிருமி இல்லாதவாறு நன்கு சுத்தப் படுத்திக் கொள்ளவேண்டும். சுமையலறை மற்றும் உணவுப் பொருட்களை எறும்பு, ஈ, கரப்பான் பூச்சிகள் மற்றும் செல்லப் பிராணிகள் அணுகாமல் பாதுகாக்க வேண்டும்.

சமைக்கப்படாத உணவுப் பொருட்கள் குறிப்பாக இறைச்சி, கோழி வகைகள், மீன் போன்றவற்றிலும் அவற்றிலிருந்து பிரியும் நீர் போன்றவற்றிலும் அபாயகரமான கிருமிகள் காணப்படும். (சமைக்கும் போது இக்கிருமிகள் அழிக்கப்பட்டு விடும்) ஆக்கிருமிகள் சமைக்கும்போது அல்லது சமைத்த உணவுகளில் கலந்து விடாமல் பாதுகாப்பாக கையாளுதல் வேண்டும். எனவே சமைத்த உணவு, சமைக்காத உணவுப் பொருட்களைத் தனித் தனியே வைக்கவும்.

சமைக்காத அசைவ உணவுகளை (கோழி, ஆட்டிறைச்சி, மீன்) ஏணைய சமைத்த உணவுடனும் சமைக்காத உணவுடனும் கலக்காது வேறாக வைக்கவேண்டும். சமைக்காத உணவுப் பொருட்களைக் கழுவுவதற்கும் உணவைத் தயாரிப்பதற்கும் பயன்படுத்தும் கத்தி, அரிவாள்மனை, வெட்டும் பலகை மற்றும் பாத்திரங்களை சமைத்த உணவுக்குப் பயன்பாடுத்தக்கூடாது.

மேலும், சமைக்காத மற்றும் சமைத்த உணவுகளுக்கு தனித்தனி பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும். நாம் சரியாகச் சமைக்கும்போது அனேகமாக எல்லா விஷக் கிருமிகளும் அழிந்துவிடுகின்றன. 700ஊ வெப்பநிலையில் சமைக்கப்பட்ட உணவே உட்கொள்ளவதற்கு சிறந்தது. அரைக்கப்பட்ட இறைச்சி, வாட்டப்பட்ட இறைச்சி, முழு கோழி போன்றவற்றிற்கு கூடிய கவனத்தைச் செலுத்துதல் அவசியமாகும்.

சமைத்த உணவுகளைப் பயன்படுத்தும் முன் நன்றாக சூடாக்கவும். அறை வெப்பநிலையில் உணவை சேமிக்கும்போது நுண்ணங்கிகள் வேகமாக வளர்கின்றன. வெப்பநிலையை 50ஊ அல்லது 600ஊ மேல் போணுவதனால் அனேகமான நுண்ணங்கிகளின் வளர்ச்சி மட்டுப்படுத்தப்படுகிறது அல்லது கட்டுப்படுத்தப்படுகின்றது. ஆகையினால் உணவை சரியான வெப்பநிலையில் பேணவேண்டும். சமைத்த உணவை இரண்டு மணி நேரத்திற்கு மேல் அறை வெப்பநிலையில் வைக்கக்கூடாது.

சகல சமைத்த உணவுகளை எளிதில் கெட்டுப் போகக்கூடிய உணவுகளையும் கூடிய விரைவில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும் (50ஊ கீழான வெப்பநிலை விரும்பத்தக்கது) குளிர்சாதனப்பெட்டியில்கூட அதி கூடிய காலம் உணவை சேமிக்க வேண்டாம். குளிரால் உறைந்து கட்டியான உணவை அறையின் உஷ்ணத்தில் சூடு குறைய வைப்பது கூடாது.

நீர், ஐஸ்கட்டி உள்ளிட்ட பல உணவுப் பண்டங்களில் கேடு விளைவிக்கும் இரசாயன மற்றும் விஷ நுன்கிருமிகள்; கலந்திருக்கலாம். காலங்கடந்த, சேதமடைந்த, பூஞ்சணம் படிந்த பண்டங்களில் நச்சுத் தன்மையுடைய இரசாயனப் பொருட்கள் உருவாக்கலாம். சரியான பொருட்களை கொளவனவு செய்தல். சுத்தமாகக் கழுவுதல் போன்ற எச்சரிக்கை இந்த ஆபத்துக்களை குறைக்கும். விஷேடமாக பச்சையாக உண்ணும் காய் கனிகளை நன்றாக கழுவி உற்கொள்ளவேண்டும்.

வெகுசன தொடர்பு சாதனங்களில் இவ்வகை உணவுகள் பற்றி கவர்ச்சியான விளம்பரங்கள் செய்யப்பகின்றது என்பதற்காக நாம் அவைகளை வாங்கி உற்கொள்வதில் அதிக கவனம் செலுத்தவேண்டும். ஏனென்றால் இது அவர்களின் வியாபார நோக்கத்துக்காகவே அன்றி வேறு ஒன்றுமில்லை என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும். உணவுதான் ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு அத்தியவசியமானதாகும். 

வைத்தியத்துறை எவ்வளவு முன்னேரினாலும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க இதுதான் காரணம். எனது நோய் வந்தபின் கவலைப்படுவதை விட வருமுன் எச்சரிக்கையான உணவுப்பழக்கத்தை கைக்கொள்வது மிகவும் பொருத்தமாக இருக்கும்.
உணவுகளைத் தெரிவு செய்யும்போதும், உண்ணும்போதும் அதனை மருந்தாக கையாளவேண்டும். அப்படி இல்லாவிட்டால் மருந்தையே உணவாகப் பயன்படுத்தும் நிலமை எங்களுக்கு ஏற்படும் என்பதை நாம் எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -