தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பால்நிலை சமத்துவம் மற்றும் சமநிலை நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெண்கள் தின நிகழ்வு 2020.03. 12 ஆம் திகதி அரபுமொழி மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
“I AM A GENERATION EQUALITY: REALIZING WOMEN’S RIGHTS” எனும் தொனிப்பொருளில் பால்நிலை சமத்துவம் மற்றும் சமநிலை நிலையத்தின் தலைவி எம்.எம்.மஸ்றூபாவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இங்கு உரையாற்றிய உபவேந்தர் நாஜீம்,பால்நிலை சமநிலை மற்றும் சமத்துவம் ஆகிய இரண்டு எண்ணக்கருக்களையும் மிகச் சிறப்பாக விளக்கியதுடன் பெண்கள் சமுதாயம் எழுச்சியடைய வேண்டுமாயின் பால்நிலை தொடர்பாக ஆண்களுக்கு அறிவூட்டப்பட வேண்டும் என்ற கருத்துக்களையும் முன்வைத்தார்.
விழாவுக்கு சிறப்புப் பேச்சாளர்களாக கிழக்குப் பல்கலை கழக, சுவாமி விபுலானந்தா இசைநடனக் கல்லூரியின் இயக்குனர் பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ் மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் பேராசிரியையான பேராசிரியை வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஹன்ஸியா அப்துல் ரவூப் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பு சொற்பொழிவுகளை ஆற்றினர்.
பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ் அவர்கள் தான் ஒரு சாதாரண குடும்தத்தில் கிராமிய சூழலில் பிறந்த போதும் கூட உன்னத நிலையை எவ்வாறு அடைந்தார் என்றும் பெண்பிள்ளைகளுக்கு எதிரான வன்முறைகள் விசேடமாக தொழில்நுட்ப அடிப்படையிலான பாலியல் வன்முறைகள் பற்றியும் அவற்றினை இல்லாதொழிப்பது சம்மந்தமாகவும் அறிவுரைகள் வழங்கினார்.
பேராசிரியை ஹன்ஸியா ரவூப் அவர்கள் தனதுரையில் ஒரு வேலைக்குச்செல்லும் பெண்ணுடைய பொறுப்புக்கள் தொடர்பாகவும் அவர் எவ்வாறு அவற்றினை பக்குவமாக கையாள முடியும், அவர் எதிர் நோக்கும் சவால்கள் என்ன என்பது பற்றியும் மிகவும் தெளிவாக எடுத்துக்கூறினார்.
இவ்விரு பேராசிரிகைகளின் அறிமுகங்களை கலை காச்சார பீடத்தின் அரசியல் துறைத்தலைவர் கலாநிதி எம்.எம்.பாஸில் நிகழ்த்தியதுடன் மாணவர் உதவிப் பிரிவின் தலைவர் கலாநிதி ஆர்.ஏ.சர்ஜூன் நன்றியுரை நிகழ்த்தினார்.
இவ்விழாவுக்கு பீடாதிபதிகளான கலாநிதி றமீஸ் அபூபக்கர், கலாநிதி எஸ்.குணபாலன் கலாநிதி எஸ்.எம்.ஜுனைடீன், கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் ஆகியோரும் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா உள்ளிட்ட சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள் நிர்வாக உத்தியோகத்தர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.