நடைபெற்று முடிந்த கோட்டமட்ட தமிழ் தினப் போட்டி நிகழ்ச்சியில் ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலய மாணவர்கள் பங்கு பற்றிய 5 நிகழ்ச்சிகளிலும் வெற்றி பெற்று ஆரம்பப் பிரிவில் கோட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.எல்.எம்.பைசல் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,எமது பாடசாலை மாணவர்கள் குறித்த போட்டியில் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி முதலாம் இடங்களைப் பெற்று வலய மட்ட போட்டியில் பங்குபற்ற தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் வலய மட்டப் போட்டியிலும் வெற்றி பெற பிரார்த்திப்பதோடு மாணவர்களுக்கும், மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவிக்கின்றேன் என்றார்.