கொரோனா பற்றிய கவலையின்றி தொடர் ஏவுகணை சோதனையில் வடகொரியா!


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
லக நாடுகள் முழுவதும் கொரோனா வைரசுக்கு எதிராக மிகப்பெரிய போரை நடத்தி வருகின்றன. ஆனால் கொரோனா வைரஸ் பரவலின் மத்தியிலும் வட கொரியா முன்னெப்போதையும் விட அதிக ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது.

வட கொரியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியிலிருந்து இன்று 2 குறுகிய தூர ஏவுகணைகள்" ஏவப்பட்டன, இவை 230 கிலோமீட்டர் (143 மைல்) அதிகபட்சமாக 30 கிலோமீட்டர் (19 மைல்) உயரத்தில் பறந்தன என்று தென் கொரியாவின் கூட்டுத் தளபதிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் சிரமங்களை அனுபவிக்கும் சூழ்நிலையில், வட கொரியாவின் இந்த வகையான ராணுவ நடவடிக்கை மிகவும் பொருத்தமற்றது, உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கேட்டு கொள்கிறோம் என்று தென் கொரியா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது
இந்த மாதம் 4வது சுற்று ஏவுகணை சோதனையில் ஏவப்பட்ட 8வது மற்றும் 9வது ஏவுகணைகளாக இவைகள் உள்ளன. ஏனெனில் வட கொரிய படைகள் தொடர்ந்து கடுமையான ராணுவ பயிற்சிகளை மேற்கொள்கின்றன, பொதுவாக வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் தனிப்பட்ட முறையில் இதனை மேற்பார்வையிட்டு வருகிறார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -