கல்முனை மாநகர சபையில் கொரோனா வைரஸ் தகவல் மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களின் அவசர பணிப்புரையின் பேரில் மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் அவர்களின் ஆலோசனை, வழிகாட்டலில் மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர் அவர்களின் ஏற்பாட்டில் மாநகர சபையின் தீயணைப்புப் படை செயலகத்தில் இந்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையம் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களினால் இன்று சனிக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது.
இங்கு கொரோனா வைரஸ் தொற்று சம்மந்தமான தகவல்கள், ஆலோசனைகளை பொது மக்கள் பரிமாறிக் கொள்ள முடியும்.
இத்தகவல் மத்திய நிலையமத்திற்கென 0672059999, 0767839995 எனும் அவசர தொலைபேசி இலக்கங்களும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.