உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 வருடத்துக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2016ம் ஆண்டு பிரேசிலிலுள்ள ரியோடிஜெனீரோவில் இந்த போட்டி நடைபெற்றது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் July மாதம் 24ம் திகதி முதல் August 9ம் திகதி வரை நடக்கிறது.
இந்தநிலையில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிவருகிறது. ஜப்பான் உள்பட 151 நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
கொரோனா வைரஸ் பீதியால் ஒலிம்பிக் போட்டி நடக்குமா? நடக்காதா? என்று ஒரு பக்கம் விவாதமே நடந்து கொண்டிருக்கிறது. ஒலிம்பிக் போட்டியை ஒரு வருடம் தள்ளிவைக்கலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் யோசனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டோக்கியோவில் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்று ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே உறுதியளித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுமா? என கேள்வியெழுந்த நிலையில் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்றும் எந்த தாமதமும் அல்லது ஒத்திவைப்பும் இருக்காது என ஜப்பான் பிரதமர் ஷின்ஷே அபே உறுதிப்பட தெரிவித்துள்ளது ஒலிம்பிக் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டால் கோடிக்கணக்கான ரூபாயை ஜப்பான் அரசாங்கம் இழக்க நேரிடும். ஏனெனில் ஒலிம்பிக் போட்டிக்காக ஜப்பான் அரசாங்கம் பல டிரில்லியன் டொலரை செலவு செய்துள்ளது. பல்வேறு நாடுகளிலும் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் திட்டமிட்டப்படி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வீரர்கள் வருவார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.