காரைதீவு குறூப் சகா-
தமிழ்மக்களுக்கான ஒரேதலைமை அது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஜயா மாத்திரமே.அதை எமது தாயகதமிழ்மக்கள் இம்முறை மீண்டும் நிருபிப்பார்கள்என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது. மாற்றுத்தலைமைக்கு அவசியமில்லை.
இவ்வாறு இலங்கைதமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா காரைதீவில் நடைபெற்ற ஊடகமாநாட்டின் ஊடகவியலாளரொருவர் எழுப்பியகேள்விக்குப் பதிலளிக்கையில் பதிலளித்தார்.
இவ்வூடகவியலாளர் மாநாடு நேற்று(11)புதன் மாலை காரைதீவு பொதுநூலக மண்டபத்தில் நடைபெற்றது.
ஊடகச்சந்திப்பில் கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தவிசாளர்களான கி.ஜெயசிறில் (காரைதீவு) த.கலையரசன்(நாவிதன்வெளி) முன்னாள்மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் ஆகியோரும் சமுகமளித்திருந்தனர்.
அங்கு 'வடக்கு கிழக்கில் தமிழ்மக்கள் மத்தியில் மாற்றுத்தலைமை பற்றிபேசப்பட்டுவருகிறதே அதுபற்றி என்ன சொல்கிறீர்கள்?' என்று கேட்டதற்கு அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர்மேலும் பதிலளிக்கையில்:
அவ்வாறு மாற்றுத்தலைமை அவசியம் என்றால் அதனைமக்கள் தீர்மானிப்பார்கள். அரசின் மாற்றுநிரலில் வந்தவர்கள் அதைச்சொல்லமுடியாது.
70வருடகாலமாக தந்தைசெல்வா கட்டிக்காத்துவந்த கொள்கைகளும் கோட்பாடுகளும் இன்றும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.அந்த வழியில் வந்தவரே சம்பந்தன் ஜயா. அவர் கிழக்குமண்ணின் பிரதிநிதி.எமதுமக்கள் பாராளுமன்றம் மட்டுமல்ல மாகாணசபைத்தேர்தலிலும் எமக்கு கூடுதலான ஆசனங்களைப்பெற்றுத்தந்தவர்கள். அது தொடரும் என்பது எமது பரிபூரண நம்பிக்கை.
வடக்கு கிழக்கில் 2009க்குப்பின் மாற்றுக்கட்சிகள்களமிறங்கக்காரணம் த.தே.கூட்டமைப்புத்தான் என்று கூறப்படுகிறதே. அது பற்றி உங்கள்கருத்தென்ன ? என்றுகேட்டபோது இவ்வாறுபதிலளித்தார்.
அந்த சலசலப்பு தேர்தலோடு போய்விடும். ஜனநாயகசூழலில்லாத காலத்திலும் ஏனைய காலங்களிலும் துணிந்துநின்று தேர்தலில் இறங்கியவர்கள் நாங்கள்.
இன்று ஓரளவு ஜனநாயகம் நிலவுகின்றகாலம் ஆகையால் வெளியேவந்து அவர்கள் தேர்தல்கேட்கிறார்கள்.அதையிட்டு நாம்அலட்டிக்கொள்ளவும் இல்லை.
அரசின் பின்புலத்தில் தமிழ்மக்களைபிளவுபடுத்தி அரசுக்கு கொஞ்ச வாக்ககளை பெற்றுக்கொடுப்பதே அவர்களதுநோக்கம். அவர்களைமக்கள் நிராகரிப்பார்கள்.
இவர்கள் எம்மீதுகுற்றம் சுமத்த எந்தஅருகதையுமில்லாதவர்கள். எந்த உரிமையுமில்லாதவர்கள்.
கல்முனைவடக்கு பொத்துவில் காணிவிவகாரம்உள்ளிட்ட தமிழ்மக்கள் எதிர்நோக்கும் பலபிரச்சினைகளை ஆட்சியின்பங்காளராகவிருந்தும் இன்னும்தீர்க்கவில்லையென்று கூறப்படுகிறது.இது பற்றி..
கல்முனை வடக்கு பிரதேசசெயலகம் விடயத்தில் நாம் கூடுதல்முயற்சிகளை எடுத்திருந்தோம். துரதிஸ்வசமாக அதுகைகூடவில்லையென்பது மனவருத்தமே. கவலைதான்.அதேவேளை கோபமும் வருகிறது.
சாய்ந்தமருது நகரசபையை திடிரென தரமுயர்த்தி வர்த்தமானிஅறிவித்தல் செய்தார்கள்.பின்னர் வாபஸ் பெற்றார்கள்.
எனவே தரமுயர்த்தல் உள்ளிட்ட பலவிடயங்கள் பேசுவதற்கு இலகு .நடைமுறையில் இவ்வாறான சிக்கல்கள்எழவாய்ப்புண்டு.அதற்குகாரணம் நாங்களே.
தமிழ் முஸ்லிம்சமுகங்கள் ஒற்றுமையாகஇல்லாவிட்டால் அதைக்காரணம்காட்டி அரசாங்கம் இவ்வாறான தேவைகளை இழுத்தடிக்கும். அரசியல்தீர்வும் அப்படித்தான். ஆகவே ஒற்றுமை அவசியம்.
நாம் எவ்வளவோ முயன்றும் அரசு தீர்வு காணத்தவறிவிட்டது.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தனியே தமிழரசுக்கட்சிமாத்திரமல்ல. ஏனைய கட்சிகளும் உள்ளன. எனவே விண்ணப்பித்த வேட்பாளர்களிடையே தெரிவு திருமலையில் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். அங்கு தேர்தல் அறிக்கையொன்றும் தயாரிக்கப்படும்.
தமிழ்மக்கள் இனவிடுதலை நிலவிடுதலை வேண்டி தாங்களே தாங்கள் ஆளவேண்டும் என்பதற்காகப் போராடியவர்கள். அரசியல் தீர்வுத்திட்டம் அவசியம்.அதேவேளை போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசம் என்பதால் அபிவிருத்தியும் அவசியம்.இரண்டையும் சமமாகக்கொண்டுசெல்லவேண்டும்.
அம்பாறை மாவட்டத்திலும்10வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர். நீங்கள் யுத்தகாலத்திலும் சரி அதற்குப்பின்னரும் பலவழிகளிலும் முற்றாக பாதிக்கப்பட்டவர்கள்.
நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. பலதேவைகள் நிறைவேற்றமுடியாமலிருந்தன.அல்லதுதாமதமேற்பட்டன. இயலாமைகளும் குடிகொண்டன.
கடந்தவைகளைமறந்து தமிழ்மக்கள் ஒற்றுமையாக ஒருஅணியாய்நின்று த.தே.கூட்டமைப்புக்கு வாகக்ளித்தால் இரண்டு ஆசனங்களைபெறக்கூடிய வாய்ப்பு எமக்குள்ளது.
அவர்கள்போட்டியிடுவதற்கு எம்மீது குறைகூறமுற்படுகிறார்கள். புதிதுபுதிதாக கட்சிகளையும்சின்னங்களையும் உருவாக்கிக்கொண்டு அரசின் நிகழ்ச்சிநிரலுக்கமைவாக செயற்படுவதற்கு துணைபோகின்றனர்.
அவர்களின்பின்புலத்தில் யார் நிற்கிறார்கள் என்பதை எமதுதமிழ்மக்கள் படித்தவர்கள்.அவர்கள் நல்லதுகெட்டதைஅறிவார்கள்.
அவர்களின்பின்புலத்தில் யார் நிற்கிறார்கள் என்பதை எமதுதமிழ்மக்கள் படித்தவர்கள்.அவர்கள் நல்லதுகெட்டதைஅறிவார்கள்.
அரசின் பின்புலத்தில் தமிழ்மக்களைபிளவுபடுத்தி அரசுக்கு கொஞ்ச வாக்ககளை பெற்றுக்கொடுப்பதே அவர்களதுநோக்கம். அவர்களைமக்கள் நிராகரிப்பார்கள்.
இவர்கள் எம்மீதுகுற்றம் சுமத்த எந்தஅருகதையுமில்லாதவர்கள். எந்த உரிமையுமில்லாதவர்கள்.
கல்முனைவடக்கு பொத்துவில் காணிவிவகாரம்உள்ளிட்ட தமிழ்மக்கள் எதிர்நோக்கும் பலபிரச்சினைகளை ஆட்சியின்பங்காளராகவிருந்தும் இன்னும்தீர்க்கவில்லையென்று கூறப்படுகிறது.இது பற்றி..
கல்முனை வடக்கு பிரதேசசெயலகம் விடயத்தில் நாம் கூடுதல்முயற்சிகளை எடுத்திருந்தோம். துரதிஸ்வசமாக அதுகைகூடவில்லையென்பது மனவருத்தமே. கவலைதான்.அதேவேளை கோபமும் வருகிறது.
சாய்ந்தமருது நகரசபையை திடிரென தரமுயர்த்தி வர்த்தமானிஅறிவித்தல் செய்தார்கள்.பின்னர் வாபஸ் பெற்றார்கள்.
எனவே தரமுயர்த்தல் உள்ளிட்ட பலவிடயங்கள் பேசுவதற்கு இலகு .நடைமுறையில் இவ்வாறான சிக்கல்கள்எழவாய்ப்புண்டு.அதற்குகாரணம் நாங்களே.
தமிழ் முஸ்லிம்சமுகங்கள் ஒற்றுமையாகஇல்லாவிட்டால் அதைக்காரணம்காட்டி அரசாங்கம் இவ்வாறான தேவைகளை இழுத்தடிக்கும். அரசியல்தீர்வும் அப்படித்தான். ஆகவே ஒற்றுமை அவசியம்.
நாம் எவ்வளவோ முயன்றும் அரசு தீர்வு காணத்தவறிவிட்டது.
தேர்தல் வருகிறது. அதுமுடிந்ததும் எமதுமக்களின் அடிப்படை பிரச்சினை மற்றும் அன்றாடப்பிரச்சினைகளையிட்டு மீண்டும் ஜனநாயகரீதியில் கவனம்செலுத்துவோம்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தனியே தமிழரசுக்கட்சிமாத்திரமல்ல. ஏனைய கட்சிகளும் உள்ளன. எனவே விண்ணப்பித்த வேட்பாளர்களிடையே தெரிவு திருமலையில் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். அங்கு தேர்தல் அறிக்கையொன்றும் தயாரிக்கப்படும்.
தமிழ்மக்கள் இனவிடுதலை நிலவிடுதலை வேண்டி தாங்களே தாங்கள் ஆளவேண்டும் என்பதற்காகப் போராடியவர்கள். அரசியல் தீர்வுத்திட்டம் அவசியம்.அதேவேளை போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசம் என்பதால் அபிவிருத்தியும் அவசியம்.இரண்டையும் சமமாகக்கொண்டுசெல்லவேண்டும்.
அம்பாறை மாவட்டத்திலும்10வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர். நீங்கள் யுத்தகாலத்திலும் சரி அதற்குப்பின்னரும் பலவழிகளிலும் முற்றாக பாதிக்கப்பட்டவர்கள்.
நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. பலதேவைகள் நிறைவேற்றமுடியாமலிருந்தன.அல்லதுதாமதமேற்பட்டன. இயலாமைகளும் குடிகொண்டன.
கடந்தவைகளைமறந்து தமிழ்மக்கள் ஒற்றுமையாக ஒருஅணியாய்நின்று த.தே.கூட்டமைப்புக்கு வாகக்ளித்தால் இரண்டு ஆசனங்களைபெறக்கூடிய வாய்ப்பு எமக்குள்ளது.
நீங்கள் செய்யவேண்டியதுவீட்டுச்சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டியது. பின்னர் விருப்புவாக்கைப்பார்த்துக்கொள்ளலாம். என்றார்.