தற்போதைய நாட்டின் நிலைமை மற்றும் எதிர்வரும் பொதுத்தேர்தல் ஆகியவைகளை கருத்திற்கொண்டு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தமிழ் செய்திப் பிரிவில் கடமையாற்ற முபாரக் முகைதீன் நியமனம் பெற்றுள்ளார்.
சிறந்த ஆளுமையும், அனுபவமும் கொண்ட ஒருவர் தேவை என்ற அடிப்படையில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன நேத்ரா அலைவரிசை நிகழ்ச்சிப் பிரிவில் கடமையாற்றி வந்த ஊடகவியலாளர் முபாரக் முகைதீன் தற்போது இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தமிழ் செய்திப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஓட்டமாவடியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர் முபாரக் முகைதீன் பதினேழு ஆண்டுகளாக இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன நேத்ரா அலைவரிசை நிகழ்ச்சிப் பிரிவில் எல்லா வகையான, ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு தன்னுடைய உயர்ந்த பங்களிப்புக்களை அர்ப்பணிப்போடு இதுவரை வழங்கி இருக்கிறார்.
அத்தோடு இவர் தேர்தல் காலங்களில் இதற்கு முன்னரும் விஷேட தேர்தல் ஒளிபரப்பின் போது செய்திப் பிரிவினர்களோடு இணைந்து தன்னுடைய பங்களிப்புக்களை வழங்கியுள்ளார்.
அதன் அடிப்படையில்தான் அனுபவம் வாய்ந்த ஆளுமை மிக்க ஒருவர் எனும் வகையில் தற்போது செய்திப் பிரிவுக்கு இவர் நியமனம் பெற்றுள்ளார்.
தொலைக்காட்சி சேவையில் சிறந்த அனுபவம் கொண்ட முபாரக் முகைதீனின் நியமனத்தின் ஊடாக உயர்ந்த சேவையை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன நிர்வாகம் எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.