மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புணாணை பகுதியில் அமைந்துள்ள மட்டக்களப்பு பல்கலைக் கழகத்தில் கொரோனா தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதை கண்டித்து இன்று வியாழக்கிழமை ஹர்த்தால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இவ்எதிர்ப்பு போராட்டத்தில் வாழைச்சேனை, ஓட்டமாவடி, வாகரை, கிரான், செங்கலடி உட்பட்ட பல பகுதிகளில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் முற்றாக மூடப்பட்டதோடு, குறித்த பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளில் மாணவர்கள் வருகை இன்மை காரணமாக பாடசாலை வெறிச்சோடிக் காணப்பட்டது.
அத்தோடு தனியார் நிறுவனங்கள், தனியார் வங்கிககள் என்பன மூடிக் காணப்பட்டதுடன், போக்குவரத்து மந்தகதியில் இடம்பெற்று வருகின்றது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றாட தொழிலாளர்களின் வேலைகளும் பாதிப்படைந்து காணப்படுகின்றது.
சகலவளிகளிலும் பின் தள்ளப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமை அறிந்தும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளை மட்டக்களப்பு புணாணை மட்டக்களப்பு பல்கலைக் கழகத்தில் தடுத்து வைத்து கண்காணிக்கப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டம் சகலவளிகளிலும் பின் தள்ளப்பட்ட மாவட்டம் இங்கு ஒருவருக்கேனும் நோய் தொற்று ஏற்பட்டால் மட்டக்களப்பு மாவட்டம் தனிமைப்படுத்தப்பட்டு நினைத்து கூட பார்க்க முடிய நிலைக்கு மாவட்டம் சென்றுவிடும் எனவே இச்செயற்பாட்டை அனுமதிக்கக் கூடாது என்பதனை வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்டம் முற்றாக முடக்கப்படும் வகையில் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
மட்டக்களப்பு பல்கலைக் கழகமானது முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் என்பதுடன், மட்டக்களப்பு பல்கலைக் கழகமானது மற்றுமுழுதாக இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.