ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயத்தில் கெளரவிப்பு நிகழ்வு.


எச்.எம்.எம்.பர்ஸான்-
ட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயத்தில் 2018, 2019 ஆம் ஆண்டுகளில் தரம் – 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதி சித்தியடைந்த மற்றும் சிறப்புப் புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (29) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் எம்.எல்.எம். பைசல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதோடு ஏனைய அதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், உதவிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.யூ.எம்.இஸ்மாயில், ஏ.எம்.ஜாபிர் கரீம், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எம்.ஐ.எம்.இல்ஹாம், முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஏ.காதர் மற்றும் ஆசிரிய ஆலோசகர் எம்.பீ.எம்.சித்தீக், கிட்ஸ் இணைப்பாளர் எஸ்.எச்.எம்.இனாமுல்லாஹ் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் அதிதிகளினால் நினைவுச் சின்னங்களும் பரிசில்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டதோடு மாணவர்களின் கலை, கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -