அனுராதபுரம் சிறைச்சாலையில் மோதல் – துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்!



னுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா அச்சம் காரணமாக கைதிகள் சிறை உடைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்போது கைதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் அதில் ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தகவல் தகவல் வந்துள்ளது.

அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் என்ற சந்தேகத்தில் 4 பேரை அனுராதபுரம் வைத்தியசாலையில் சிறை அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்.

இதன்பின்னர் சிறையில் உள்ள கைதிகள் தம்மை வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும் எனக்கோரி அதிகாரிகளுடன் முரண்பட்ட நிலையில் முரண்பாடு உச்சம் பெற்றுள்ளது.

ஆயுள் கைதிகள் அரசியல் கைதிகளுடன் சிறை வைத்திருந்த நிலையில் ஆயுள் கைதிகள் அவர்களை அடைத்து வைத்த சிறையை உடைத்து சிறைச்சாலை உள் வளாகப்பகுதிக்கு வந்துள்ளனர்.

இதனையடுத்து கைதிகள் சிறையின் முன் வாயிலை உடைக்க முயற்சித்த நிலையில் அதிரடிப்படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

கைதிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட போதிலும் நிலைமை கட்டுக்கடங்காமையால் கைதிகளை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -